Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையவிஷமிகளின் அடுத்த இம்சை..சிக்கிய இர்ஃபான் கான்!

பிரபல நடிகர் இர்பான்கானின் முகநூல் பக்கம் திடீரென புதன் கிழமை அன்று ஹேக் செய்யப்பட்டு, பின் மீட்கப்பட்டுள்ளது.

அவரது முகநூல் பக்கத்தில் ஒழுங்கற்ற பதிவுகள் வந்திருப்பதைக் கண்ட அவரது குழுவினர், ஹேக்கர்களால் வேறு ஏதும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே விரைந்து செயல்பட்டு அதனை தடுத்துள்ளனர்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் மற்றும் ஷாஹித் கபூர் போன்றோரது சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டு மீட்கபட்டது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின்களுக்கு ஆபாச வீடியோக்கள் என்றால் ஹீரோக்களுக்கு ஹேக்கிங் தொல்லைகள். 

இணைய விஷமிகள், பிரபலங்களுக்கு  இப்படி ஒரு புது வழியிலும் இடையூறு கொடுத்து வருகிறார்கள்.   

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close