Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாலிவுட்டிலும் போட்டி போடும் பாலிவுட் நடிகைகள்

ட்வெயினி ஜான்சனுடன் இணைந்து ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பாக்ஸிங் வீரரும், நடிகருமான ட்வெய்னி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தானும், பிரியங்காவும் பேவாட்ச் படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளதை உறுதிசெய்துள்ளார். உலகிலேயே மிகப் பெரிய நடிகர்களுள் ஒருவரான ட்வெய்னி பிரியங்காவை பேவாட்ச் குழுவிற்கு வரவேற்கிறோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளதை அடுத்து பாலிவுட் பரபரப்பாகியுள்ளது.

குவண்டிகோ சீரியல் மூலம் அமெரிக்க ரசிகர்களை ஈர்த்த பிரியங்கா ஹாலிவுட் ரசிகர்களையும் ஈர்க்கத் தயாராகிவிட்டார். இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, தான் பேவாட்ச் படத்தில் நடிக்க உள்ளதை அதிகாரபூர்வமாக தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். ஆயித்ராஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா, அப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். பேவாட்ச் படத்திலும், அத்தகையே கதாபாத்திரத்திலேயே நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

 90களில் அமெரிக்க தொலைக்காட்சியில் இடம் பெற்ற டிவி நிகழ்ச்சியே பேவாட்ச். லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்பகுதியில் லைப்கார்டாக பணிபுரிபவர்களைப் பற்றிய தொடர், பேவாட்ச் உலகெங்கிலும் அதிகமாக பார்க்கப்பட்ட தொடர் எனும் சிறப்பிற்குரியது. அடுத்த வாரத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பில் பிரியங்கா இணைய உள்ளார் என கூறப்படுகிறது. இப்படம் மே 2017ல் வெளியாக இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னதாக தீபிகாவும், வின் டீசலும் XXX படத்தில் நடிக்கப் போவதை வீடியோ மூலமாக அறிவித்திருந்தனர், தற்போது பிரியங்காவும், ட்வெயினி ஜான்சனும் தங்களது வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்திய நடிகைகளின் போட்டி ஹாலிவுட்டிலும் ஆரம்பமாகிவிட்டது. ஏற்கனவே ஐஸ்வர்யா, ஸ்ரேயா உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் கால்பதித்தது நாமறிந்ததே. தற்போது தீபிகா, பிரியங்கா ஹாலிவுட் எண்ட்ரீ.

-பிரியாவாசு-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்