Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் ரஜினி ரசிகன் - ஷாருக்! - சூப்பர் ஸ்டார்களின் நட்பு! (FAN ANTHEM வீடியோ)

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ஃபேன். மனிஷ் சர்மா இயக்கிவரும் இப்படத்தை யாஸ் ராஜ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

ஷாருக்கான் என்னும் ஸ்டார் நடிகனுக்கு ரசிகனாக இருக்கும் ஓர் இளைஞன், அவனின் கதையே ஃபேன் திரைப்படம். இப்படத்தில் ரசிகனாகவும் ஷாருக்கானே நடித்திருக்கிறார். விஷால் - சேகர் இசையமைத்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 15ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கான ஃபேன் ஆன்தம் (FAN Anthem) பாடலை ஹிந்தி மொழியில் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஹிட். படத்தின் புரமோஷனுக்காக தற்போது இப்பாடல் பெங்காலி, போஜ்புரி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழில் இவ்வீடியோவை ஷாருக்கான் ட்விட்டரில் வெளியிடும்போது, நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன் என்று குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “ நான் என்னை ஒரு நட்சத்திரமாக உணரவில்லை உங்களுடைய (ரஜினி) எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவனாகவே உணர்கிறேன். உங்கள் ரசிகன் என கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்" என்று ஷாருக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத்திகழும் ஷாருக்கான், பாலிவுட் மட்டுமின்றி உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். தனது ரா-ஒன் படத்தில், எந்திரன் சிட்டியாக ரஜினி வருவதாகக் காட்சி அமைத்திருப்பார். சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தின் லுங்கி டான்ஸ் பாடலை ‘தலைவா’ என்று ரஜினியை வைத்தே படமாக்கியிருப்பார்.

இரண்டு சூப்பர் ஸ்டார்களின் இந்த நட்புரீதியான போக்கு, இரண்டு மொழி ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரிடமுமே வெகுவான பாராட்டைப் பெற்றுள்ளது.


மேலும் அனைத்து மொழிகளிலும் ஃபேன் ஆன்தம் பாடலை வெளியிடும்போதும், அந்தந்த மொழியின் ஸ்டார் நடிகர்களுக்கு இந்தப் பாடலை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டே வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஃபேன் திரைப்படம் டப் செய்துவெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான புரமோஷனாகவே இவ்வாறு வெளியிடப்படுவதாகவும் இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ரஜினிக்காக ஷாருக்கான் டெடிக்கேட் செய்த பேன் அந்தம் பாடல் தமிழில்:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close