Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஹ்மான், ரசூல் பூக்குட்டிக்குப் பிறகு ஆஸ்கர் மேடையில் பிரியங்கா!

இன்று காலை (இந்தியாவிற்கு) ஹாலிவுட்டில் நடைபெற்ற, 88வது ஆஸ்கார் விருதுகளைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. லியோனார்டோ டி காப்ரியோவின் முதல் ஆஸ்கர், ஆஸ்கர் பந்தயத்தில் அதிக விருதுகளை வென்ற மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட் என வலைத்தளங்களில் ஆஸ்கர் வைரஸ்கள் பரவி  கொண்டிருக்கையில், இந்த ஆஸ்கரை நமக்கு சிறப்பாக்கி தந்த நாயகி பிரியங்கா சோப்ராவை பற்றி எப்படி பேசாமல் இருப்பது.

இன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழாவினை தொலைகாட்சியில் பார்த்த அநேக இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருந்திருக்கும். ஆஸ்கர் மேடையில் பிரியங்கா...உடம்பெல்லாம் புல்லரிக்க வைத்தது அந்த தருணம்.

ஏ.ஆர். ரஹ்மானும், ரசூல் பூகுட்டியும் ஆஸ்கார் விருது வென்ற போது ஏற்பட்ட  பெருமை, பிரியங்கா ஆஸ்கார் விருதை அறிவிக்கும்போதும் நிச்சயமாக ஒரு உற்சாகம் நமக்குள் ஏற்பட்டிருக்கும். ஒரு இந்தியப் பெண்  ஆஸ்கர் விருதுகளில் தொகுப்பாளராக நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த தருணம் அது.

ஹாலிவுட்டின் பல ஜாம்பவான்கள் நிறைந்த அந்த அரங்கில், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை அறிவிப்பதற்காக, ஆஸ்கர் பிரியங்காவை அழைத்தபோது," 50  திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலிவுட்டின் சிறந்த கலைஞர்"  என அறிமுகப்படுத்தியது. அந்த ஒரு நொடி  போதாதா. கம்பிரமான குரலில் சிறந்த படத்தொகுப்பிற்கான விருது மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட் என்று கூறிவிட்டு, ஒரு பெண் படத்தொகுப்பாளருக்கு அவ்விருதை வழங்கினார் பிரியங்கா.

ஒவ்வொரு வருடமும் பிற மொழித் திரைப்படங்கள் பிரிவில் இந்தியப் படத்தின் பெயர் இடம் பெறாதபோது அடையும் ஏமாற்றம், இம்முறை பாலிவுட்டின் நிகரில்லா நாயகி எனும் புகழாரம் மூலம் இந்திய சினிமாவிற்கு பிரியங்கா பெருமை சேர்த்துள்ளார்.

டிவிட்டரில் தனது மகிழ்ச்சியினைப் பகிர்ந்துள்ள பிரியங்காவிற்கு பாராட்டுகள் குவிவதோடு, நமது உலக நாயகன் கமல் ஹாசனும் தன்னம்பிக்கையுடன் காணப்பட்ட பிரியங்காவிற்கு பாராட்டுகளை தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.

-பிரியாவாசு-

ஆஸ்கார் விழாவில் ஜொலித்த பிரியங்கா ஆல்பத்திற்கு: http://bit.ly/21CZYNh

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close