Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னைக்குக் குடை பிடிக்கும் பாலிவுட்

கனமழையால் சிதைந்து போன சென்னைக்கு தமிழகம் மட்டுமல்லாது நாடெங்குமிருந்து அனுதாபங்களும் உதவிகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. பொது மக்கள், மாணவர்கள், நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த அளவு சென்னையின் நிவாரணத்திற்குப் பங்காற்றியுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஏற்கனவே நிதி கொடுத்திருக்க, தற்போது வீடுகளை இழந்த சென்னைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரும் முயற்சியிலிருக்கும் பாலிவுட் நடிகை ஜேக்குலின் ஃபெர்னாண்டசுடன் முன்னனி நடிகர் ஹிருத்திக் ரோஷன் கரம் கோர்த்துள்ளார்.

இலங்கையைச் சார்ந்த பாலிவுட் நடிகையான ஜேக்குலின் ஃபெர்னாண்டஸ் சென்னை மக்களின் நலனுக்காக 10,000 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ‘மனிதருக்கான வாழ்விடம்’ என்ற தொண்டு அமைப்போடு சேர்ந்து ‘ஜேக்குலின் பில்ட்ஸ்’ என்ற திட்டத்தைத் துவக்கி இருப்பிடம் இல்லாதோருக்கு இல்லம் அமைத்துத் தரும் வேலைகளைச் செய்து வருகிறார்.

இத்திட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி கட்டடம் கட்டும் பணியுடன் தொடங்கவிருப்பதாகவும் ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தனது தோழிக்காக, ரித்திக் ரோஷனும் ஐந்து லட்சரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.

ஹிருத்திக்கின் இந்த உதவிக்காக டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஜேக்குலின், “ பாலிவுட்டோ அல்லது பிற சினிமாத் துறைகளோ தனித்துவமாக விளங்குவதாக நான் உணர்கிறேன். அதை நான் நேசிக்கிறேன். இது போன்ற தருணங்களில் என் நண்பர்கள், என்னோடு பணிபுரிபவர்கள், வேலை செய்தவர்கள் என அனைவரும் உறுதுணையாக இருக்கின்றனர். வேண்டிய உதவிகளை செய்கின்றனர்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.

சென்னை மழையால் மொத்த நகரமும் நாசமாகித் தவித்த போது, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தனது ‘தில்வாலே’ படக்குழு சார்பாக ஒரு கோடி ரூபாயும், எந்திரன்-2 வில்லன் இந்திநடிகர் அக்ஷய் குமார் சாரூக் போலவே 1 கோடி ரூபாயும்,  ஹிருத்திக் ரோஷன் நிவாரணப் பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்திலுள்ள பல்வேறு பள்ளிகளுக்குச் சென்றுள்ள ஜேக்குலின் அங்குள்ள குழந்தைகளின் படிப்புகளுக்காக நிதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நட்சத்திரங்களெல்லாம் சென்னைக்காக இன்னும் உதவி செய்து வருகையில், நம் ஆட்கள் அவர்களுக்குள்ளேயே சண்டைகட்டிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.

மு.பிரதீப் கிருஷ்ணா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close