Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யோகா அனுஷ்கா vs ஜிம் சல்மான்....இது தான் சுல்தான் ஃபிட்னெஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் ஹீரோ அர்ஜூன் கபூரின் எடை 140 கிலோ. அவரின் அப்பா போனி கபூர், பெரிய தயாரிப்பாளர். அதனால், பையன் ஹீரோ ஆவது எளிது. ஆனால், எடையைக் குறைக்காமல் என்ன செய்ய முடியும்? அப்போது உதவ முன்வந்தார் சல்மான்கான். அவரின் வழிகாட்டுதலில் அர்ஜூன் பயிற்சி செய்ய, 70 கிலோவாகக் குறைந்தது எடை. இப்போது, சிக்ஸ்பேக்கில் லைக்ஸ் அள்ளுகிறார் அர்ஜூன். ஃபிட்னெஸ் என்றதும் பாலிவுட் திரும்புவது சல்லுபாய் திசை நோக்கித்தான். 

சல்மான் கான்

வரும் ஜூலையில் வெளிவர இருக்கும் சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துக்கொண்டிருக்கும்  சல்மான், அனுஷ்கா சர்மாவோடு பக்கா பேக்கேஜாக வருகிறார். இருவருமே இந்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சி  மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள்  தரும்  சில ஃபிட்னஸ் டிப்ஸ்...

வொர்க்அவுட்டை, காலுக்கான பயிற்சிகள் ஒரு பகுதி, தோள்பட்டை, கைகள் அடுத்து என மூன்று நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செஷன் முடிந்ததும் ஓய்வு எடுங்கள். இந்த முறைப்படி தசைகளைச் சீராகத் தயார் செய்யலாம்.

வாரத்தில் ஏழு நாட்களும் உடற்பயிற்சி அவசியம்தான். ஆனால், அதை ஜிம்மில்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. இரண்டு நாட்கள் விளையாட்டு, நான்கு நாட்கள் ஜிம், ஒரு நாள் வீட்டுப்பயிற்சிகள் எனச் செய்யலாம்.

உடலை வருத்திப் பயிற்சி செய்யும்போது, மூச்சை வெளியேவிட வேண்டும். அப்படி இல்லாமல், அடக்கிவைப்பது சிக்கலில் முடியலாம்.

மாதத்துக்கு ஒரு முறை பயிற்சிகளை மாற்றுங்கள். செய்த பயிற்சிகளையே திரும்பச் செய்யும்போது, உடல் அதற்கு ட்யூனாகி, பலன்கள் கிடைப்பது குறைந்து விடலாம்.

எல்லாவற்றுக்கும் ஊக்கம் என்பது முக்கியம். அதனால், வொர்க்அவுட், எடை போன்றவற்றைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும். பாசிட்டிவோ, நெகட்டிவோ அது நம்மை ஊக்கப்படுத்தும்.

அனுஷ்கா சர்மா

நடனம்தான் அனுஷ்கா ஷர்மாவின் ஃபேவரைட் வொர்க்கவுட். தினமும் நடனம் ஆடியே கலோரிகளைக் குறைத்துவிடுவார். எடையைச் சரியாகப் பராமரிக்க, வாரத்துக்கு நான்கு நாட்கள் சிறப்புப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். தனது ஃப்ரெஷ்னெஸ்க்கு யோகாவே காரணம் என்கிறார் இந்த பாலிவுட் குயின்.

காலை நேர உடற்பயிற்சி அந்த நாள் நல்லபடியாக இருக்க உதவும். புத்துணச்சியுடன் ஒரு நாளை ஆரம்பிப்பதே நல்ல விஷயம். காலையில் வொர்க்கவுட் செய்ய முடியாமல் போனால், மாலை 7 மணிக்குள் உங்கள் வொர்க் கவுட்டை முடித்துவிடுங்கள். இந்த எக்ஸ்பிரஸ் உலகில் நம் உடலும் மனமும் எப்போதும் ஆக்டிவ் மேட்தான். அதற்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது ஆபத்தில் முடியும். எனவே, தினமும் எட்டு மணிநேர நிம்மதியான உறக்கம் அவசியம்.

நம் தோல் என்பது  கண்ணாடி போல, நாம் என்ன உண்கிறோமோ, அதை அப்படியே பிரதிபலிக்கும். எனவே உங்கள் டயட்டில் கூடுதல் கவனம் தேவை.

ஆரோக்கியம் என்பது நம் கூந்தலுக்கும் அவசியம். குறிப்பாக பெண்கள்  இதைக் கவனத்தில்கொள்ள  வேண்டும். தலைக்குக் குளிக்கும் முன்பு, தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தாலே போதும்.

யோகா கற்றுக்கொள்ளுங்கள். நம் வாழ்வில் பாதிக்கும் மேலான பிரச்னைகளைப் போக்க, யோகா நிச்சயம் உதவும்.

சுல்தான் பட டீஸருக்கு:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close