Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஸ்வர்யா ராய் ஏன் வயலெட் லிப்ஸ்டிக் அணிந்தார்?!

நடிகைகளின் நடிப்பு மட்டுமல்ல அவர்களின் மேக்கப், உடைகள் கூட விமர்சனங்களுக்குள்ளாவது நாமறிந்ததே. இதில் உலக அழகியென்றால் விடுவார்களா?

ஐஸ்வர்யா ராய் சமீபத்திய கேன்ஸ் சிவப்புக் கம்பள நிகழ்ச்சியில் உடுத்தி வந்த உடையும் , மேக்கப்பும் தான் தற்சமயம் வைரலோ வைரல். வருடா வருடம் கேன்ஸ் விழாவிற்கு சென்று போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய் குழந்தைப் பிறப்புக்குப் பின் சென்றபோது, சற்றே 'பப்ளி'யாக தோன்ற உடனே அதை விமர்சித்தனர். ”குழந்தை பெற்றபின் உடலின் மாற்றங்களை ஏன் விமர்சிக்க வேண்டும்?” என ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவுக் குரல்களும் எழுந்தது.

இந்த வருடம், ஐஸ்வர்யா ராய் வயலட் நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு வர பஞ்சாயத்து ஆரம்பம். ஃபேஷன் உலகம் முதல் நெட்டிசன்ஸ் வரை ஐஸ்வர்யாவின் உதட்டுச் சாயத்தை சர்ச்சையாக்கியுள்ளனர். இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் தேர்தல் வேறு நடக்க, ”எல்லாருக்கும் விரலில் மை, ஐஸுக்கு உதட்டில் மை என கலாய்க்க, ‘எதனால் இந்த சர்ச்சை?’ என்று சற்று ஆராய்ந்தோம்.

ஐஸ்வர்யா ராய் ஒரு பிரபல நிறுவனத்தின் புது லிப்ஸ்டிக்கை விளம்பரப்படுத்த வேண்டியே அதைப் பயன்படுத்தியுள்ளார். அடர் வயலட் நிற லிப்ஸ்டிக்கான இது, The Kiss Of OOmpa Loompa எனும் பெயரில் 50 வித்தியாசமான Colour Shade-களில் விற்பனையாகிறது. அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதரான ஐஸ்வர்யா ராய், அதில் ஒன்றை பயன்படுத்தியிருக்கிறார்.

மேக்கப் அதிகம் இல்லாத, நகைகள் அணியாத அவரது முகத்தில் இந்த லிப்ஸ்டிக் இன்னும் பளிச்செனத் தெரிய குபுகுபுவென கமெண்ட்டுகளில் பொங்கிவிட்டனர் ஆன்லைன் மக்கள். சிலர் ஐஸ்வர்யா தனது எப்போதுமான தோற்றத்திற்கு விடைக் கொடுத்து புதிய ஃபேஷனை தைரியமாக எடுத்துக்கொண்டதற்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஐஸ்வர்யா ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். “ நான் நடிகையாக இருக்கிறேன்... மேலும் எனக்கு ஃபேஷன் மிகவும் பிடிக்கும். அதைக் கலையாகப் பார்க்கிறேன். இதற்கிடையில் எனக்குக் குடும்பமும் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் கவனிப்பது முடியாத காரியம்தான். ஆனால் எனக்கு இது மனச்சங்கடமாக இல்லை. விமர்சனங்களை மனதார ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெல்டன் ஐஸ்!

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்