Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜேம்ஸ் பாண்ட் அழகிகளின் 6 அசாத்திய குணங்கள்!

திரடி சண்டைகள், அதிநவீன கருவிகள், கார் சேசிங், ஸ்டைலிஷ் வில்லன்கள்... இதெல்லாம் இருந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஹைலைட் கவன ஈர்ப்பு... பாண்ட் கேர்ள்ஸ்..! பாண்ட் பட அழகிகளுக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும். சில இடங்களில் ஸ்டைலிஷ்... சில இடங்களில் ஆக்‌ஷன்.. பல இடங்களி க்ளாமர் என லேடி அந்நியனாய் அடிக்கடி குணம், மனம் மாறிக் கொண்டே இருப்பார்கள் அந்த அழகிகள். யுத்தம், முத்தம் என எதற்கும் எங்கேயும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு பாண்ட் பட அழகிகளிடமும் நாம் காணக் கூடிய ஆறு குணங்கள் இவை....

1) அசத்தும் அழகு

இவர்களின் முதல் பலம் அழகு தான். ஜேம்ஸ் பாண்டை வலையில் வீழ்த்துவதாகட்டும், வில்லன்களை ஏமாற்றுவதாகட்டும் இவர்களின் முதல் ஆயுதம் அசரடிக்கும் அழகு தான். உர்சுலா ஆண்ட்ரூஸ் தொடங்கி இப்போது ரிலீஸ் ஆக இருக்கும் ஸ்பெக்டர் படத்தின் பாண்ட் கேர்ள் மோனிகா பெல்லூச்சி வரை இதற்கு உதாரணங்கள்.

2) மிரட்டல் ஆட்டிட்யூட்

பொதுவாக பாண்ட் கேர்ள்கள் மிகத் தெளிவானவர்கள். சமயத்தில் பாண்டையே ஏமாற்றி சிக்க வைத்து, ’நான் வில்லன் கூட்டத்தில் ஒருத்தி’ எனச் சிரிப்பார்கள். அந்தச் சிக்கலில் இருந்து பாண்ட் எப்படியும் தப்பிவிடுவார் என்பது வேறு கதை. அதே போல் பாண்ட் எப்போது தன்னை நெருங்க வேண்டும் என முடிவு செய்வதும் இவர்கள்தான். எப்பேர்பட்ட அழகனாக இருந்தாலும் இவர்கள் சம்மதிக்காமல், அவர்களை நெருங்க, தீண்ட முடியாது.

3) தைரிய லட்சுமி

இவர்களின் தைரியம் அசாத்தியமானது. சில சமயம் அது பிரச்சனையில் சென்று மாட்டிவிடும். உதாரணமாய், தனக்காக பாண்ட்கேர்ள் வில்லனை ஏமாற்றி எதாவது காரியம் சாதிக்க வேண்டும் என பாண்ட் நினைக்கையில், அவர்கள் தயாராகி சென்று, வில்லனிடம் சிக்கிக் கொள்ளவும் செய்வார்கள். சில நேரம் பாண்ட் அவர்களைக் காப்பாற்றிவிடுவார். இல்லையெனில் தமிழ் பட போலீஸ் போல எல்லாம் முடிந்த பின் வந்து வில்லன் மீது வெறியாவார்.

4) மர்ம மோகினி

இவர்கள் மர்மமானவர்களும் கூட. கடைசி வரை இவள் நல்லவளா இல்லை கெட்டவளா என ஜேம்ஸ் பாண்டே சந்தேகத்துடன் தான் இவர்களிடம் பழகுவார். இன்னொரு பக்கம் பாண்ட் பெண்கள் அழகாக இருக்கிறாரா என்று மட்டுமே பார்ப்பார். அவர்களின் பின்னணி குறிந்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டமாட்டார். ஏனென்றால், எவ்வளவு ஆபத்து நிறைந்த பின்னணி என்றாலும், அதைச் சமாளிக்கும் தில் அவருக்கு இருக்கும். அதனாலேயே பாண்டை எளிதாக தங்கள் வலையிலோ, படுக்கையிலோ வீழ்த்தி விடுவார்கள் இந்தப் பெண்கள்.

5) எங்கேயும் எப்போதும்

திடீரென வில்லன்கள் துரத்துகிறார்கள். அணிந்திருக்கும் ஹைஹீல்ஸுடன் ஓட்டம் பிடிக்க வேண்டும் என்றால் ஓடித்தான் ஆக வேண்டும். சண்டை போட வேண்டும் என்றால் அடியாட்களை தெறிக்க விடவேண்டும். பாண்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமென்றாலும் தயங்காமல் செய்ய வேண்டும். இப்படி என்ன செய்ய வேண்டும் என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பார்கள்.

6) லேடி பாண்ட்

கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்டின் லேடி வெர்ஷனாக இருக்க வேண்டும். திடீரென எதாவது தகவல் கிடைத்தால் தானாக துப்பு துலக்க கிளம்ப வேண்டும். யாரை எதிர்க்க வேண்டிய நிலை வந்தாலும், அது ஜேம்ஸ் பாண்டாகவே இருந்தாலும் தைரியமாக செய்ய வேண்டும்.

- பா. ஜான்ஸன் - 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்