Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுவரை இல்லாத புதிய அனுபவம் கொடுக்கும் ஜேம்ஸ்பாண்டின் ஸ்பெக்டர்

ஹாலிவுட் படங்கள் என்றால் நம் கண்முன் முதலில் நிழலாடுவது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தான். அன்றிலிருந்து இன்று வரையிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. நாளை இந்தியாவில் ஸ்பெக்டர் வெளியாகவிருக்கிறது.

1962ல் தொடங்கி இதுவரை 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகி ஹிட் அடித்திருக்கின்றன. ஸ்பெக்டர் 24வது ஜேம்ஸ்பாண்ட் படம். அன்றிலிருந்து இன்று வரை ஆறு ஹிரோக்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கிறார்கள்.

கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால் உள்ளிட்ட முந்தைய பாகங்களில் நடித்த டேனியலின் நான்காவது அட்வென்சர் படம் தான் ஸ்பெக்டர்.

சர்வதேச அளவில் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிழலான நிறுவனம் தான் ஸ்பெக்டர். இந்த நிறுவனம் செய்யும் சட்டவிரோத செயல்களையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் முறியடித்து, அழிப்பது தான் ஸ்பெக்டர் படக் கதை.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நிச்சயம் இருக்கவேண்டிய கதாபாத்திரங்களான வில்லன் வேடத்தில் கிறிஸ்டோபர் வாட்ஸ் நடித்திருக்கிறார். ஜேம்ஸ்பாண்டின் கனவுக்கன்னியாக மோனிகா பெல்லூச்சி, ஜேம்ஸ்பாண்டின் மேலதிகாரியான எம் வேடத்தில் ரால்ஃப் ஃபைன்ஸ் நடித்திருக்கிறார்.

முந்தைய பாகமான ஸ்கை பால் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சாம் மெண்ட்ஸ் தான் இயக்கியிருக்கிறார். அனைத்து பாகத்திலுமே ஜேம்ஸ்பாண்ட்டிற்காக பிரத்யேகமான கார்கள் வடிவமைக்கப்படும். இந்தமுறை ஆஸ்டன் மார்டினின் DP10 ரக கார்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கார் இதுவரையிலும் விற்பனைக்கு வரவில்லை என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையெல்லாம் தாண்டி நமக்கு மற்றுமொரு ஸ்பெஷல் , முதன் முறையாக ஐ-மேக்ஸ் 3டியில் சென்னையில் ஸ்பெக்டர் வெளியாகிறது. ஐ-மேக்ஸ் என்றால் நீளமான ஸ்க்ரீன், துல்லியமான காட்சிகள் என்று பார்க்கும்போது பிரம்மிப்பை ஏற்படுத்தும் அடுத்த கட்ட தொழில் நுட்பத்தில் வெளியாகிறது. இந்த தியேட்டரில் ஒரு டிக்கெட்டின் விலை 360 மட்டுமே.

பி.எஸ்.முத்து

MUST READ

எடிட்டர் சாய்ஸ்