Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதல் சின்னமான டைட்டானிக் இஸ் பேக்!

பிரிட்டிஷ் பயணிகள் கப்பலான ஆர்.எம்.எஸ் டைட்டானிக் 1912-ல் தன் முதல் பயணத்தை சவுத் ஹேம்டனில் இருந்து தொடங்கி, வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருந்தபோது துரதிருஷ்ட வசமாக, பனிப்பாறையின் மீது மோதி, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிப் போனது. நெஞ்சை ஊலுக்கும் இந்நிகழ்வில் சுமார் 1,500 பயணிகள் இறந்து போனார்கள்.

காலம் போகப் போக, சம்பவம் மறையத் தொடங்கினாலும், ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி 1997ல் வெளியான "டைட்டானிக்" படம் மூலம் எல்லார் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டது. அதற்கு முக்கியக் காரணம், அந்தக் கப்பல் பயணித்திருந்த கடலுக்கு நிகராக, கதையில் அவர் புகுத்தியிருந்த காதலின் ஆழம்.

ஆம். நம்மூர் "தாஜ்மகாலுக்கு" அடுத்து அதிக காதல் கலாய்ப்பு வார்த்தையாக காலேஜ் வட்டாரப் புழக்கத்தில் இருந்த டைட்டானிக் நிஜத்தில் மீண்டு(ம்) வருகிறது. இதனை வடிவமைக்கும் "ப்ளூ ஸ்டார்" நிறுவனம், 1912ன் அசல் டைட்டானிக்கின், அசாத்தியமான அதே நுணுக்கங்களுடன் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனுடைய முதல் பயணப் பாதை சீனாவின் ஜியாங்சூ'விலிருந்து துபாய் வரை என  வரையப் பட்டுள்ளது. இதில் சிறிய நீச்சல் குளங்கள், டர்கிஷ் குளியல்கள், ஸ்குவாஷ் அரங்குகள் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.

என்னதான் இன்று இருக்கும் கனரகக் கப்பல்களில் ரோபோட் பார்-டென்டர் வரை தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் உச்சகட்டத்திற்குப் பயன்படுத்தப் பட்டாலும், இந்த டைட்டானிக் 1912-க்குப் பிறகு எந்தவித மாற்றமும் இல்லாத மெய்நிகரியாக விளங்கும் என்பதில் இதன் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

885 அடி நீளமும், 174 அடி உயரமும் கொண்ட இக்கப்பலில்  ஒரே நேரத்தில் 2435 பேர் பயணிக்கலாம். ஒன்பது தளங்களைக் கொண்ட இதில் 900 பணியாளர்கள் இருப்பார்கள். மணிக்கு சுமார் 24 நாட்டுகள் ( 44.5 கி.மி) வேகத்தில் செல்லத் தக்கது.

இதன் மூலக் கூறாகவும், மூலதனமாகவும் விளங்கும், "ப்ளூ ஸ்டார்" நிறுவனத்தை நடத்தி வரும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் க்ளைவ் பால்மர் இதனை வெகு விரைவில், உலக மக்களுக்கு கொண்டு சேர்த்து, அவர்கள் நினைவுகளுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளார்.

- மு.சித்தார்த் - மாணவப் பத்திரிக்கையாளர்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close