Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேட்மேனும், சூப்பர்மேனும் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால்…?

உலகம் முழுவதும், கோடிக்கணக்கான சூப்பர்ஹீரோ சினிமா ரசிகர்களை உருவாக்கியவர்கள், பேட்மேனும், சூப்பர்மேனும். இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் "பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்" திரைப்படம், அடுத்தவாரம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், கென்யா நாட்டைச் சேர்ந்த காமிக் புத்தக ஓவியரான சலீம் புசுரு, பேட்மேன், சூப்பர்மேன், ஜோக்கர், வொண்டர் வுமன் போன்ற சூப்பர்ஹீரோ திரைப்பட கதாபாத்திரங்கள் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால் எப்படி இருப்பார்கள் என தன் கற்பனையை கார்ட்டூன் ஓவியங்களாகத் தீட்டியுள்ளார்.

கார்ட்டூன்களை உருவாக்கியது மட்டுமின்றி, அந்த ஆப்ரிக்க கார்ட்டூன் கதாபாத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டிக் கதையையும் உருவாக்கியுள்ளார் சலீம். இதுபற்றி, தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள சலீம், "உலகம் முழுவதும் "பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்" திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு, இந்த சூப்பர்ஹீரோக்கள் ஆப்ரிக்கர்களாக இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

அமெரிக்கக் கதாபாத்திரங்களுக்கு, வெறும் கறுப்பு வண்ணத்தை மட்டும் பூசாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஆப்ரிக்கப் பழங்கதைகளுடன் பொருத்தி, வரையத் தொடங்கினேன். ஆப்ரிக்க சூப்பர்ஹீரோக்களை உருவாக்கிய பின், இவர்கள் யாருடன் சண்டையிடுவார்கள் என யோசித்தேன். அமெரிக்க காமிக் கதாபாத்திரங்கள், ஹிட்லர் தொடங்கி இனவாதம் வரை பல இக்கட்டான சூழ்நிலைகளில் சண்டையிட்டு, மக்களைக் கவர்ந்துள்ளனர்.

ஆப்ரிக்காவும், வறட்சி, சர்வாதிகாரிகள், ஊழல், வறுமை போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகிறது. இதில் மாட்டிக்கொள்ளும் மக்கள், எதிர்த்து சண்டையிடத் துணிவு இல்லாதவர்களாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்ப்பவர்களோ, சித்திரவதை செய்யப்படுகின்றனர். சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகின்றனர். இதனால், ஆப்ரிக்க மக்கள், முகமூடி இட்ட சூப்பர்ஹீரோவை விரும்புவரா அல்லது தங்களால் முடியாத செயலைச் செய்யும் தங்களில் ஒருவரை விரும்புவரா என என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

ஆப்ரிக்க பேட்மேனை, போர் வீரனுடனும், ஆப்ரிக்க சூப்பர்மேனை, எகிப்தியக் கடவுளுடனும், ஆப்ரிக்க ஜோக்கரை ஊழல்வாதியுடனும், ஆப்ரிக்க வொண்டர் வுமனை உழைக்கும் ஆப்ரிக்கப் பெண்ணுடனும் பொருத்தி, இக்கதாபாத்திரங்களை சலீம் புசுரு உருவாக்கியுள்ளார்.

ஜெ. விக்னேஷ் (மாணவப் பத்திரிக்கையாளர்)     
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close