Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது ஆமைகளின் அதிரடி சரவெடி! ”நிஞ்சா டர்டில்ஸ்” திரை அலசல்!

கெட்ட சைன்டிஸ்ட், வேற்று  கிரக ஏலியன்கள், உலகத்தை அழிப்பது  என்ற அலுத்துப்போன சாகச கதை தான் “டீனேஜ் ம்யூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்: அவுட் ஆஃப் தி ஷேடோஸ்”. ஆனால், அதையும் மீறி , படம் பார்த்த அனைவரையும் 112 நிமிடங்களும் கைத்தட்டி விசிலடிக்க வைக்கின்றன இந்த நிஞ்சா ஆமைகள்.

கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பொம்மைகள், வீடியோ கேம்கள் என அசத்திய நிஞ்சா டர்டில்ஸ் , திரைப்படங்களிலும் அசத்திக்கொண்டு தான் இருக்கின்றன.  முதல் பாகத்தின் வில்லனான ஷ்ரெட்டரை வைத்து, வேற்று உலகில் இருந்து கிராங் தலைமையிலான ஏலியன்களை உலகத்திற்குள் அனுப்பி, உலகை ஆள திட்டமிடுகிறார்கள். நான்கு ஆமைகளும், காட்ஃபாதர் எலி, ஏப்ரல் (மேகன் ஃபாக்ஸ்) உதவியுடன் , கிராங்கை வென்று உலகைக் காப்பாற்றினார்களா என்பதே மீதிக் கதை.

போர்ட்டல் இயந்திரத்தை கைப்பற்ற, பிபாப், ராக்ஸ்டெடி என இரு கிரிமினல்களை நியமிக்கிறான் ஷ்ரெட்டர். கெட்ட சைன்டிஸ்ட் பாக்ஸ்டர் ஸ்டாக்மேன், கிராங்கிற்கு உதவியாக நாசவேலைகள் செய்கிறார். கிராங் தரும் மருந்தில், பிபாப் பன்னி மூஞ்சி வாயனாகவும், ராக்ஸ்டெடி காண்டாமிருகத் தலையானாகவும்  மாறும் இருவரின் அட்டகாசம், திரையரங்கில் அமர்களம்.

ராக்ஸ்டெடியாக WWE புகழ் ஷீமஸ் நடித்து இருக்கிறார். இவர்கள் போக மெயின் வில்லன் கிராங் கொடூரமாக இருக்கிறார். வில்லனின் பட்டாளம் இப்படியிருக்க, ஆமைகளின் பட்டாளம் இன்னும் வெறித்தனமாக இருக்கிறது. ஹை-டெக்காக ஆயுதங்கள் ஏந்திய வாகனம் என மாறினாலும் , ஆமைகள் இன்னமும் அதே பாதாள சாக்கடையில் தான் குடியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் மேகன் ஃபாக்ஸ் இவர்களிடம் மாட்டிக்கொள்வது போல் , இந்தப் பாகத்தில், 'ஏரோ' தொலைக்காட்சித் தொடர் புகழ் ஸ்டீபன்  ஏமல், இவர்களிடம் சிக்குகிறார்.

ஷ்ரெட்டர் தப்பிக்கும் சண்டைக்காட்சிகள், போர்ட்டலை எடுக்க, ஹெலிகாப்டர், கடல் சண்டை, இறுதியில் மெயின் வில்லனை எதிர்கொள்ளும் சண்டை என படம் முழுக்க வரும் சண்டைக் காட்சிகள் தான் படத்தின் பிளஸ். பன்னி மூஞ்சி வாயன், காண்டாமிருகத் தலையன் இருவருடன்ஆமைகள் செய்யும் காமெடிகள் குழந்தைகளைக் கவரும் என்றாலும், மீசை வைத்த பெரிய சைஸ் எலியை பார்க்க குழந்தைகள் பெரிதும் விரும்பவில்லை. அடுத்த பாகத்திலாவது எலியை அப்புறப்படுத்தலாம்.

முதல் பாகத்தில் யாருமே பார்க்காத வண்ணம் மறைந்து வாழும் ஆமைகள், இந்த முறை, காவல்துறைக்கு மட்டும் “நாங்க யார்?” எனக் காட்டுகிறார்கள். முதல் பாகத்தில் இருந்த சோகமான காட்சிகள் கூட, இதில் இல்லை என்பதால், நிஞ்சா டர்டில்ஸ் ரசிகர்களுக்கு, இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.

அனிமேஷன் படங்களே  ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிவருகிறது. கடந்த வாரம் ஆங்கிரிபேர்ட்ஸ் என்றால் இந்தவாரம் நிஞ்சா டர்டில்ஸ் தொடர்ந்து “ஃபைன்டிங் டோரி ” மற்றும் “ஐஸ் ஏஜ்”  படங்களும் ஆன் தி வே...

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close