Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ருதி முதல் ராதிகா ஆப்தே வரை... வைரல் ப்ளஷ் ஆல்பங்கள்..!

மியூசிக் சேனல்களாக தேடித் தேடி பாட்டு கேட்டு ஓய்ந்து போன நம் இளசுகளுக்கு யூ ட்யூப்பின் வரவு சற்றே ஆறுதல் அளித்தது. ஆனால் அதுவும் கொஞ்ச காலத்தில் அலுத்துப்போக புதுசா எதுவும் இருக்காக பாஸ்..? என்று கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்காகவே புதிது புதிதாக வீடியோ ஆல்பங்களை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது ப்ளஷ் யூ ட்யூப் சேனல். அவர்கள் வெளியிட்டு வைரலான சில வீடியோக்களை பற்றி பார்க்கலாம்...

சாதாரணமாக வீடியோ ஆல்பமாக செய்யாமல் வாரந்தோறும் ஒரு செலிபிரிட்டியை வைத்து வீடியோ எடுக்கிறார்கள். பிங்க் படம் வெளிவருவதற்கு மூன்று நாள்கள் முன்பு அமிதாப் பச்சன் நடித்த ஒரு ஆல்பத்தை வெளியிட்டனர். அந்த ஆல்பம் பயங்கர ஹிட்டடித்தது. 

 

 

அமிதாப் ஆல்பத்துக்கு அடுத்து ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்துக்காக வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மலிக்கை வைத்து ஒரு ஆல்பத்தை வெளியிட்டது ப்ளஷ் டீம். அந்த ஆல்பத்தில் அவர் எப்படியெல்லாம் பயிற்சி செய்கிறார் என்பதையும் அவர் மல்யுத்தம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றது. அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

 

 

அடுத்தடுத்து வைரல் வீடியோக்களைக் கொடுத்த ப்ளஷ் டீம், அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் நடிகை ராதிகா ஆப்தேவை வைத்து ஆல்பம் ஒன்றை வெளியிட்டனர். உங்களின் அழகை கண்டுபிடியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த ஆல்பத்தில் ராதிகா ஆப்தே தனது சிறு வயது போட்டோ ஒன்றை பார்த்து, எது அழகு என்று தனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டுக் கொள்வார். இந்த சமூகம் நம்மை எப்படி பார்க்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது அழகு இல்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது தான் அழகு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ செம ஹிட். 

 

 

கடந்த வாரம் ப்ளஷ் டீம் வெளியிட்ட சுருதிஹாசன் ஆல்பம் இன்று வரை பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. பி தி பிச் என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தில் சுருதிஹாசனின் ஒரு நாள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற தோணியில் எடுத்திருக்கிறார்கள். 

 

 

இந்த வார புதுவரவாக, கொடைக்கானல் ஆல்பத்தின் மூலம் பிரபலமான சோபியா அஷ்ரப்பை வைத்து ‘எனி குட் நியூஸ்’ என்ற ஒரு ஆல்பத்தை எடுத்திருக்கிறார்கள். திருமணமான சில மாதங்களிலே தம்பதிகளிடம் கேட்டும் கேள்வி, “ஏதாவது நல்ல செய்தி இருக்கா..?” என்று தான். அந்த ஒரு வார்த்தையை மையமாக வைத்து இந்த வீடியோ ஆல்பத்தை எடுத்திருக்கிறார்கள் ப்ளஷ் டீம். 

 

 

மா.பாண்டியராஜன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close