Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கடைசியில்... இது என்னுடையது!' ஆஸ்கர் மேடையில் ஜாக்கிசான் நெகிழ்ச்சி!

நடிகர் ஜாக்கிசானுக்கு கடந்த சனிக்கிழமை கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நெகிழ்ந்து போன ஜாக்கிசான் ஆஸ்கர் மேடையில் பேசிய எமோஷனல் பேச்சு இதுதான்...

ஆஸ்கர்

”நான் இங்கு நிற்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு கனவு. ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகளை என்னுடைய தந்தையுடனோ, தாயுடனோ பார்ப்பேன். அப்போது என் தந்தை என்னிடம், ' நீ இந்த உலகில் பல விருதுகள் வென்றிருக்கிறாய். எப்போது ஆஸ்கர் விருது பெறப்போகிறாய்?' எனக் கேட்பார். என் தந்தையைப் பார்த்து சின்னதாக சிரித்துவிட்டு, நான் வெறும் காமெடி, ஆக்‌ஷன் படங்கள் மட்டும் நடிப்பவன் என சொல்வேன். பல வருடங்கள் கழித்து, நான் ஹாலிவுட்டிற்கு வந்தேன். நிறைய ஸ்டூடியோக்கள் சென்றேன், இயக்குநர்களை சந்தித்தேன், ஸ்டோலன் (சில்வஸ்டர் ஸ்டோலன்) போன்ற நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றேன். 23 வருடங்களுக்கு முன்பு நான் இந்த விருதை அவரின் வீட்டில் பார்த்தேன். அதை தொட்டுப் பார்த்து, முத்தமிட்டு, அதன் மணத்தை நுகர்ந்து பார்த்தேன். (சில்வஸ்டர் ஸ்டோலனைப் பார்த்து) அதில் இன்னும் என் விரல் ரேகைகள் இருக்கும் என நம்புகிறேன். பிறகு என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன் எனக்கும் இந்த விருது வேண்டும் என விரும்புகிறேன் என்று. திரைத்துரைக்கு வந்து 56 வருடங்களுக்குப் பிறகு, 200க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பிறகு, பல எலும்புகள் முறிந்த பிறகு கடைசியாக இது என்னுடையது ஆகியிருக்கிறது என ஜாக்கிசான் சொல்ல அரங்கமே கரவொலியில் நிறைகிறது. 

மேலும் ஜாக்கிசான் பேசியதை தெரிந்து கொள்ள வீடியோவைப் பார்க்கவும்.

 

பி.கு: ஜாக்கி சான் சொல்லும் காலகட்டத்தில் வெளியானது சில்வஸ்டர் ஸ்டோலனின் ராக்கி திரைப்படம் தான். ஆனால், அந்தப் படம் சிறந்த கதை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு ஆகிய விருதுகளைத் தான் பெற்றது. சில்வஸ்டர் ஸ்டோலன் சிறந்த கதாநாயகனாக நாமினி தான் செய்யப்பட்டார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close