Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுண்டாட்டம்

விளையாட்டு’ வாழ்க்கையில் வினை ஆவதே 'சுண்டாட்டம்’.

 ஹீரோ இர்ஃபான், கேரம் கில்லி. தாதா நரேனின் பிரியத்துக்குப் பாத்திரமாகி, அவரது கேரம்போர்டு கிளப்பில் ஆஸ்தான பிளேயர் ஆகிறார். இன்னொரு பக்கம் தங்கையின் தோழி அருந்ததியுடன் அவருக்குக் காதல். இர்ஃபான் வரவால் கிளப்பில் ஓரம்கட்டப்படுகிற மது, கொலைவெறியுடன் திரிகிறார். மதுவின் வன்மம், அருந்ததியினுடைய அண்ணனின் எதிர்ப்பு, நரேனின் உயிருக்குக் குறிவைக்கும் எதிர் கோஷ்டி என்று மூன்று விதமான சூழலுக்கு நடுவே இர்ஃபான் எப்படி மீண்டு வந்தார் என்பது திக் திடுக் க்ளைமாக்ஸ்!

வழக்கமான காதல், வழக்கமான மோதல் கதைதான் என்றாலும், படமாக்கிய விதத்திலும் திரைக்கதையின் நேர்த்தியிலும் புருவம் உயர்த்த வைக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா ஜி.தேவ். சிற்சில கிளிஷேக்கள் இருந்தாலும், சினிமா மொழியைக் கச்சிதமாகக் கையாண்டுள்ள விதத்தில்... கை கொடுங்க பாஸ்!

நெடுநெடு உயரம், விடலை உடம்பு, காதல் கொப்பளிக்கும் கண்கள் என இர்ஃபான், இந்தப் படத்துக்கு நல்ல தேர்வு. நண்பனை அடித்துவிட்டார்கள் என்றதும் நரேனின் ஆட்கள் என்று தெரியாமலே போட்டுப் பொளப்பது, போதையில் தரையில் 'மண்சோறு’ சாப்பிடுவது, எதிரியின் ஏரியாவுக்குள் நுழையும்போது எல்லாம் கண்ணில் காட்டுகிற தயக்கம் என எல்லாவற்றிலும் செம ஃபிட்.

நிறைவாகச் செய்திருக்கிறார் அருந்ததி. மஞ்சள் பற்கள், போதை யில் செருகிய கண்கள், தளர்ந்த நடை என போதை அடிமையாக வரும் காசி கேரக்டரில் செம மிரட்டு மிரட்டுகிறார் மது. ''அவன் எப்படித் தப்பிச்சான்?'' என்று கூலிப்படை நண்பனைக் கத்தியால் குத்தும் இடத்திலும், ''நான் வேலைக்கு ஆக மாட்டேன்னு நினைச்சுட்டியா?'' என்று மனைவி யைக் கொன்று சாக்குமூட்டையில் போட்டுவிட்டு அலறிக் கதறும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். நரேனும் சரி, அவரது அடியாட்களாக வரும் ஸ்டாலினும் சென்னையின் இருட்டு ஏரியா மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலங்கள் பாலகுருநாதனின் மிரட்டும் ஒளிப்பதிவும் அச்சுவின் அதிரடிக்கும் பின்னணி இசையும்.

கதையின் முதல் பாதியில் அரை மணி நேரமும் இரண்டாம் பாதியில் அரை மணி நேரமும் சுண்டாட்டம் நொண்டி விளையாடுகிறது. அருந்ததியின் அண்ணனுக்கு அம்புட்டு பில்டப் கொடுத்துவிட்டு, கடைசியில் காமெடி பீஸ் ஆக்கிவிடுகிறார்கள். நரேனைப் போட்டுத் தள்ளுவது என்கிற அசைன்மென்ட்டை நரேனின் அடியாளுக்குக் கொடுத்துவிட்டு அடிக்கடி டென்ஷன் ஆகும் அந்த 'பாய்’ யார் பாஸ்? அவ்வளவு படைபலம் உள்ள பாய் கேரக்டரே, நரேனைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். அதே மாதிரி மிருக பலம்கொண்ட மதுவே இர்ஃபானைக் கொன்றுவிட முடியுமே? ஆளாளுக்கு அசைன்மென்ட் கொடுத்துவிட்டு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

கேரம் விளையாட்டு சாம்பியன்களின் உடல் மொழி, ஆடும் ஸ்டைலை நுட்பமாகப் புகுத்திய தற்கும் அழகியலுடன் படமாக்குவதற்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அதே உழைப்பைத் திரைக்கதையிலும் காட்டி இருந்தால், இன்னும் சுண்டி இழுத்திருக்கும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close