Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... - சினிமா விமர்சனம்

சுமார் மூஞ்சி குமாருக்கு காதலி செட் ஆகவில்லை. பாலாவுக்கு காதல் செட் ஆகவில்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் 'பால-குமாரா’ என்று இருவரையும் அந்தக் களேபரக் காதல் 'தொம்சம்’ செய்வதே படம்!

வட சென்னை, ஒரு கொலை, சில மதுக் கடைகள், இரண்டு காதல்கள், ஒரு விபத்து, ஒரு முக்கோண 'கள்ளக்காதல்’... என சகட்டுமேனி 'மிக்ஸிங்’ கொண்ட கதையால் சிரிக்கச் சிரிக்க 'சியர்ஸ்’ சொல்கிறார் இயக்குநர் கோகுல்.

அட, பக்கா கமர்ஷியல் சினிமாவில் விஜய் சேதுபதி. ஆனால், ஜாலி கேடியாக செமத்தியாக ரசிக்கவைக்கிறார் மனுஷன். எந்த நேரமும் உற்சாக உதறலுடன், 'பட் குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று சீன் போடும்போதெல்லாம் பின்னி எடுக்கிறார். அண்ணாச்சி கோஷ்டியை லவ் டார்ச்சர் செய்தபிறகு 'கும்மு’ வாங்குவதும், நடு ராத்திரியில் சரக்குக் கிடைக்காமல் அண்ணாச்சி கடை வாசலிலேயே நிற்கும்போது விசாரிக்கும் ரோபோ சங்கரிடம், 'ஒண்ணுமில்லியே’ என்று ஜகா வாங்குவதுமாக... படம் முழுக்க பட்டாசு கிளப்பிட்ட குமாரு!

சில நிமிடங்கள்தான் என்றாலும் 'சுகர் பேஷன்ட்’ அண்ணாச்சியாக பசுபதி... காமெடி வெடி. டாம் அண்ட் ஜெர்ரி காதலர்களாக அஸ்வின், ஸ்வாதி நச். 'ஹவுஸிங் போர்டு’ அழகியாக அலட்டல் மிரட்டலில் நந்திதா... ஆசம்... ஆசம்! கள்ளக்காதலுக்காக கொலைசெய்யும் ராஜேந்திரன், வினோத் முன்னா, மைத்துனனை கரெக்ட் செய்யும் மதுமிதா, 'சிங்கத்தைச் சாய்ச்சுட்டாங்க’ என்று சலம்பும் சூரி, 'அண்ணே லவ் மேட்டர்ல ஃபீல் ஆகிட்டாப்ல... ஆஃப் அடிச்சாருன்னா கூல் ஆகிருவாப்ல’ என்று கதிகலங்கும் 'ரொம்ப சுமார் மூஞ்சி குமார்’ டேனியல், மல்லு மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கர், 'நல்ல ஃப்ரெஷ்ஷா இருக்குஜி... இன்னொரு தடவை சொல்லுங்க’ என்று லிப்லாக் போடும் முருகானந்தம்... என ஒவ்வொரு கேரக்டரும், அடி தூள்!  

'அழகான பெண்ணைக் காதலிக்கிறதும், சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்வா இருக்கிறதும் ரிஸ்க்கான வேலை. நான் ரெண்டுமே பண்றேன்’, 'நான் கை ஆட்டுறதை அப்பவே நிப்பாட்டிட்டேன். ஆனா, இன்னும் ஆடிட்டு இருக்கு பாரு’ - சின்னச் சின்ன வசனங்களில்கூட கிச்சுக்கிச்சு மூட்டுகிறது கோகுல்- கார்க்கியின் வசனங்கள். 'என் வீட்டில்...’, 'ஏனென்றால்...’ பாடல்களில் ரசிக்கவைக்கும் சித்தார்த் விபின், 'ப்ரேயர் ஸாங்’கில் சிரிக்கவைக்கிறார்.

படம் முழுக்க குவார்ட்டர், டாஸ்மாக், கொலை, கள்ளக்காதல் என்று ராவடி செய்துவிட்டு, இறுதியில் ரத்ததானம், மது எதிர்ப்பு மெசேஜ் சொல்வதெல்லாம், குறும்புஜி!

இடைவேளைக்குப் பிந்தைய ரோலர் கோஸ்டர் காமெடிக்காக, இந்தப் பாலகுமாரனுக்கு ஆசைப்பட்டு 'லைக்’ கொடுக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close