Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காக்கி சட்டை - படம் எப்படி?

ஹீரோவா மாறின எல்லாரும் ஒரு நாள் போலீஸ் டிரெஸ்ஸ மாட்ட வேண்டிய நிலைமை வரும். இப்போ அந்த நிலைமை நம்ம சிவகார்த்திகேயனுக்கு. உடல் உறுப்புத் திருட்டு உலக அளவுல நடக்குது. இன்ஸ்பெக்டராகி படு ஃபோர்ஸா வேலை பாக்க நினைக்குற புத்திசாலி கான்ஸ்டபிளான சிவகார்த்திகேயனுக்கு இந்த கேஸ் கிடைக்குது. என்ன ஆச்சுங்கிறது மீதி கதை.

சிவகார்த்திகேயன் நல்லாத்தான் நடிக்கிறாரு. ஆனாலும், மாஸ் சீன்கள் வரும்போது நம்மையும் மீறி 'சிவகார்த்திகேயனுக்கு மழையில ஃபைட்டா... அவருக்கு சேஸிங்கா? என கேட்டுத் தொலைக்கிறது மைண்ட் வாய்ஸ். இருந்தாலும், ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கே உரிய லுக், போலீஸுக்கே உரிய ஃபிட், நடை என தன்னை அப்பட்டமாக மாற்றியிருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா... அட ஏம்பா அந்தப் பொண்ணுக்கு இவ்வளவு மேக்கப். படம் முழுக்க ’பிங்க் லிப்ஸ் பிங்க் லிப்ஸ்’ பாட்டே பாடலாம் போல அப்படி வர்றாங்க. நர்ஸ் எஃபெக்ட்டே வரல. ஆனாலும் மென்மையா வந்துகிட்டு இருந்த பொண்ணு, இந்தப் படத்துல கொஞ்சம் நல்லாவே வேலை பாத்துருக்கு.

பிரபு, மனோபாலா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, வித்யூலேகா... இப்படி படம் முழுக்க நட்சத்திர பட்டாளம்தான்.  கதையோடு ஒட்டி எல்லாரையும் சரியா பயன்படுத்தி, காமெடி டிராக்கைக்கூட கதையோட பின்னியிருக்காரு இயக்குநர் துரை செந்தில்குமார். கதை மட்டும் கொஞ்சம் வேற யோசிச்சுருக்கலாம். ‘என்னை அறிந்தால்’ படத்த ஞாபகப்படுத்திட்டீங்களே!

அடடே வில்லன்! அலட்டாம ஆர்ப்பாட்டம் இல்லாம சால்ட் & பெப்பர் முடியை ஸ்டைலா தள்ளி விட்டுகிட்டே நின்னு விளையாண்ட்ருக்காரு விஜய் ராஸ். லைட்டா நமக்கு ரகுவரன் கெடச்சுட்டாருன்னுகூட சொல்ல வெச்சுருக்காரு.

முதல் பாதி போன இடமே தெரியலை, அவ்ளோ ஃபாஸ்ட். இரண்டாம் பாதிதான் கொஞ்சம் நீளம். ஆக்ஷன் கதைக்கு அதிரடி தெறி தெறிக்குது அனிருத் பின்னணி இசை. ‘காதல் கண் கட்டுதே’ பாட்டு படம் முடிஞ்ச பிறகும் கேட்டுகிட்டே இருக்கு. விஷுவலும் சரி, ஆக்ஷன் சீன்களுக்கும் சரி... சுகுமார் கேமரா சூப்பர்.

’போலீஸ்கிட்டையே காசு கேக்கறியேய்யா, அட... போலீஸே போலீஸுக்கு குடுக்கலைன்னா எப்படியா’, ’உங்களையெல்லாம் பாத்தா பிச்சையெடுக்கற மாதிரியா இருக்கு, பின்ன ஐ.பி.எல். டீம ஏலம் எடுக்கற மாதிரியா இருக்கு’ - இப்படி படம் முழுக்க பட்டுக்கோட்டை பிரபாகரோட டைமிங் காமெடி வசனங்கள் அள்ளுது.

நல்ல கமர்ஷியல் ஆக்ஷனுக்குறிய அத்தனை சிறப்பு அம்சங்களும் படத்துல இருக்கு. பாத்து பழகின சீன்தான். ஆனாலும், சிவகார்த்திகேயன் தன்னோட பாணியிலயே மொத்த படத்தையும் முதுகுல தூக்கியிருக்காரு.

சரி... படம் பார்க்கலாமா? சிவகார்த்திகேயனோட அப்டேட் வெர்ஷன பாக்கணும்னா கண்டிப்பா பாக்கலாம் பாஸ்!

 

- சினிமா விகடன் குழு -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close