Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொம்பன்- படம் எப்படி?

படத்துக்கு எதிர்ப்பு, வெளியிட தடை கோரி மனு இப்படி பல சிக்கல்களை கடந்து ரிலீஸ் ஆகியிருக்கற படம் கொம்பன்.

இதில தாழ்த்தப்பட்ட மக்களையோ அல்லது வேற சாதிக்காரர்களையோ எங்கேயுமே இழிவுபடுத்தவில்லை. படம் முழுக்க ஒரே ஒரு சாதிக்காரங்கதான் வர்றாங்க. மறந்தும்கூட மருந்துக்குக்கூட வேறு சாதிக்காரர்கள் இல்லை.

பெரிய மீசை, ஏத்திக் கட்டின வேட்டி, எகத்தாளமான பார்வை...அப்போ கார்த்தி என்ன பண்ணுவாரு? பார்க்கிறவர்களையெல்லாம் அப்பப்போ பொளந்துகட்டுவாரு. அதுக்காக அநியாயத்துக்கு யாரையும் அடிக்கமாட்டாரு. நியாயத்துக்காகத்தான் அடிப்பாரு. அப்படி என்ன அநியாயத்தைத் தட்டிக் கேக்கிறார்னு கேக்கறீங்களா? ஆட்டுச்சந்தையில ஆட்டை நிறைய தண்ணி குடிக்கவெச்சு எடை கூட விக்கிறவங்களை அடிச்சுப் பொளக்கிறாரு. பின்னே அவர் என்ன ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையா எதிர்க்கப்போறாரு. அரசநாடு, வெல்ல நாடு, சேமநாடுன்னு மொத்தம் மூணு ஊரு. இந்த மூணு ஊரையும் கண்ட்ரோல்லில வெச்சுக்கிட்டு தான் நினைக்கிறவங்களே ஊராட்சித் தலைவர் ஆகணும்னு நினைக்கிறாரு சூப்பர் சுப்பராயன். இதுக்கு தடையா கார்த்தி. இடையில் மாமனார், மருமகன் பாசம், உறவு, கடைசியா என்ன ஆச்சுங்கறது மிச்ச கதை.

கார்த்திக்கு இது பருத்திவீரன் பார்ட் டூ மாதிரிதான். அதே வாயோரச் சிரிப்பு, பந்தா நடை, தூக்கிக்கட்டின வேட்டி, கோபப் பார்வை... ஏற்கனவே செஞ்ச வேடம்கிறதால ஈஸியாப் பண்ணிடறார். ஆனா இடைவேளை வரைக்கும் அவர் நல்லவரா, கெட்டவரான்னு குழப்பமாவே இருக்கிறது. ஊருக்காக உயிரையே கொடுப்பேன்னு அலையற அளவுக்கு அவருக்கு ஊர் என்ன பண்ணுச்சுன்னுதான் அங்கங்க டவுட்டு வருது. பெரிசா மீசை வெச்ச அஞ்சாறு பெரிசுக வெட்டித்தனமா ஊரைச் சுத்தறது, பஞ்சாயத்துப் பண்றது, சாவடியில உக்காந்து தாயம் விளையாடறதுன்னு இருக்காங்க. இவங்ககூட சேர்ந்து கார்த்தியும் பல பஞ்சாயத்துகளைப் பண்ணிக்கிட்டிருக்காரு. மத்தபடி கிராமத்துக்கு நல்ல ரோடு வேணும், பஸ் வேணும், குடிதண்ணீர் வசதி வேணும்னு போராடறது  இதெல்லாம் ’ஊருக்கு நல்லது பண்றது’ லிஸ்ட்ல வராதுபோல.

மாமனார் ராஜ்கிரண் ‘எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் தாங்கறார் இவரு ரொம்ப நல்லவர்’ மாதிரியான கேரக்டர். அவரு ஆங்காங்கே பல தத்துவங்களையும் அவர் ஸ்டைலில் அள்ளி விடுகிறார். உதாரணத்திற்கு, ”முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!” இப்படி.



லெட்சுமி மேனன்...கிராமத்துக்குன்னே வாழ்க்கைப்பட்ட பொண்ணுமாதிரி இருக்காங்க. கார்த்தி ஏன் இப்படி ஊர் வம்பை விலைக்கு வாங்கிட்டு வர்றார்னு கேக்கற இடத்துல மட்டும் மனசுல நிக்கிறாங்க. மத்தபடி அவங்க அப்பாவை அசிங்கப்படுத்தறப்போ எல்லாம் ஏன் அவ்வளவு அமைதியா இருக்காங்கன்னு தெரியலை. தன்னோட டிரேட் மார்க் எக்ஸ்பிரஷன்களோட அசத்துறாங்க கோவை சரளா. தம்பி ராமையாவுக்கு வழக்கமான ரோல். ‘ஆல்கஹால்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா? ஆளுக்காள் அடிக்கிறதாலதான்’னு சொல்றதுமாதிரியான ஒருசில இடங்களில் ரசிக்கலாம்.

படத்தில் வில்லன்கள் கொஞ்சம் அதிகம். பெரிசு பெரிசா மீசை வெச்சு, எப்பப் பாத்தாலும் முறைச்சுக்கிட்டு, சவால்விட்டுக்கிட்டு திரியறாங்க. ஆனால் பல சமயங்களில் கார்த்திகிட்டேயும் ஒரு தடவை ராஜ்கிரண்கிட்டேயும் செமத்தியா வாங்கிக்கட்டிக்கிறாங்க. அதுவும் வயசான ராஜ்கிரணைப் போட்டுத்தள்ள அவங்க போடற பிளான்லாம் செம காமெடி பாஸ்!

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கறுப்பு நிறத்தழகி’ பாட்டு செம மாஸ். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கா.

ஆனா ஊருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிற ஒருத்தன், அநியாயத்தைத் தட்டிக் கேக்கற ஹீரோ, அநியாயமான வில்லன்கள், எப்பப் பார்த்தாலும் சாமி, சாராயம், திருவிழா, அருவான்னே திரியற கிராமத்துக்காரங்கன்னு கொன்னெடுக்கிறாங்கப்பா இந்த கொம்பன்!

சரி பார்க்கலாமா? கார்த்திய ரொம்ப வர்சுஅஹ்ம் கழிச்சு திரும்பவும் பருத்தி வீரன் கெட்டப்ல பாக்கணும், அப்படியே வளைய வர அவருக்கேத்த ஜோடி லட்சுமி மேனன் இவங்க ரேண்டு பேரையும் பாக்கணும்னா கண்டிப்பா பாக்கலாம்.
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close