Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வை ராஜா வை - படம் எப்படி?

சாதாரண மனிதன் அசாதாரணமாக பலருக்குத் தெரியும்போது என்ன நடக்கும்?இதுதான் ‘வை ராஜா வை’!

படித்துவிட்டு நண்பனின் கம்பெனியில் வேலைக்குச் செல்லும் கௌதம் கார்த்திக், அழகான குடும்பம், அழகான காதலி. ஆனால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடும் புது சக்தி ஹீரோ கௌதம் கார்த்திக்குக்கு இருக்கிறது. விடுவார்களா..? தேடி வருகிறது பிரச்னை. அதென்ன பிரச்னை என்பதே மீதி கதை.

இந்தப் படம் கௌதம் கார்த்திக் நடிப்புக்கு சரியான தீனி. அழகான காதலி, ஒன்றுமே தெரியாத குடும்பம், தானாக தேடிவரும் பிரச்னை, அதை சமாளிக்கும் விதம் என கௌதம் முன்னேற்றம். ப்ரியா ஆனந்துக்கு இந்தப் படத்தில் வசனங்கள்கூட குறைவு. நடிக்கும் வாய்ப்பும் மிகக் குறைவு.ஹீரோயின் ப்ரியா ஆனந்த் தான் எனினும் டாப்சி மிகச்சில காட்சிகளில் ப்ரியா ஆனந்தை மிஞ்சிவிடுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டேனியல் பாலஜிக்கு சரியான முழுநீள வில்லன் வேடம். நெத்திப்பொட்டில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ‘இப்ப சொல்லு... நீ சாவியா?’ எனக் கேட்கும்போதும், 'ஒரு ஃபேமிலி ஸ்னாப்' என சிரித்துக்கொண்டே என்ட்ரி கொடுக்கும்போதும் டேனியலுக்கு அப்ளாஸ்.

சதீஷ் வழக்கமான ஃப்ரெண்ட். நண்பனின் பிரச்னையில் 'நானும் வரேன்' என வம்பாக மாட்டிக்கொண்டு தவிக்கும்போது 'அடடே' என அசத்துகிறார். எல்லாம் சரி... எங்கே இருந்து கண்டுபிடித்தீர்கள் இப்படி ஒரு சைட் டிஷ்ஷை?

ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ என ஏற்கெனவே ஒரு படம் கொடுத்தவர்தான். எனினும், கதையும் சரி... கதைக்களமும் சரி... கண்டிப்பாக ஒரு பெண் இயக்குநருக்கு தமிழில் இது புதிதுதான். ஆக்‌ஷன் காட்சிகள், சூதாட்டம் என இயக்குநராக சபாஷ் போட வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

யுவனின் பின்னணி இசை வழக்கம் போல். சண்டைக் காட்சிகளில் அதிரடி,. பாடல்களில் 'வை ராஜா வை' மற்றும் 'பச்சை வண்ணப் பூவே' ஓகே. ஆனால், மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு பாடல்கள் இல்லை என்றே கூறலாம். இளையராஜா, தனுஷ் கூட்டணி பாடலும் சுமார்தான். என்ன செய்து என்ன பயன்?

கடைசி சில நிமிடங்களில் படத்தை முழுக்க தன்வசப்படுத்திவிடுகிறார் தனுஷ். கொக்கி குமாரு இன்ட்ரோவை தியேட்டரே கொண்டாடுகிறது. கௌதமிடம் தனுஷ் ‘பையன் பளிச்சுனு ஃப்ரஷ்ஷா இருக்கான்ல’ என கேட்கும்போதுதான் அலெர்ட் அடிக்கிறது... ஹீரோ கௌதம் கார்த்திக் என.

அவ்வளவு பெரிய கேசினோவில் அப்படி அலெர்ட்டாக இருக்கும்போது இவர்களின் கிராசிங், குறிப்புகள், சைன் லாங்குவேஜ் இவற்றை எல்லாம் எப்படி நோட் பண்ணாமல் இருக்கிறது செக்யூரிட்டி தரப்பு. சரி... சின்னச் சின்ன குறிப்பாக வரும் ஆபத்துகளை முன்பே சொல்லும் கௌதம் கார்த்திக்கு அதெப்படி பால், ரன், விக்கெட்டெல்லாம் கூட அத்துப்படி? அவ்வளவு பெரிய சக்தி என்றால், இது சூப்பர் ஹீரோ ரேஞ்சை காட்டிலும் வேறு ரகமாயிற்றே.

மொத்தத்தில் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் குழப்பம், இப்போது டிக்கெட்டுகள் இருக்குமா இல்லையா என்ற கேள்விகளுக்கு, 'இங்கே வாங்களேன்' என கை நீட்டி அழைக்கிறது ‘வை ராஜா வை’

சரி பார்க்கலாமா? கொக்கி குமாரு தோரணை, கௌதம் கார்த்திக்கின் அப்டேட் வெர்ஷனைப் பார்க்க வேண்டுமானால், கண்டிப்பாகப் பார்க்கலாம்.

 

- சினிமா விகடன்குழு - 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close