Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜேம்ஸ் பாண்ட் படம்.. முன்னாள் ஜேம்ஸ் பாண்டுக்குப் பிடிக்கலையாம்.. உங்களுக்குப் பிடிக்குமா? ’ஸ்பெக்டர்’ படம் எப்படி?

ஜேம்ஸ் பாண்ட் தொடரின் அடுத்த பாகமான ஸ்பெக்டர் ஒரு வழியாய் இந்தியாவில் ரிலீசாகிவிட்டது. வழக்கமான பாண்ட் சாகசங்களுக்கும், அவரிடம் மயங்கும் பெண்களுக்கும் குறைவில்லாத அக்மார்க் பாண்ட் படம். ஸ்பெக்டர் என்கிற கிரிமினல் குழுவில் இருப்பவர்களை கண்டறிந்து , அவர்களை அழிப்பதே ஜேம்ஸ் பாண்டின் புதுப் படமான ஸ்பெக்டர் படத்தின் ஒன்லைன்.அதில் அவர் யாரை சந்திக்கிறார், எந்த எந்த நாடுகளுக்கு பறக்கிறார், அந்த குழு என்ன என்பதில் நீள்கிறது கதை.

முன்னாள் தலைவர் ' M' ஆலோசனைப்படி மெக்ஸிகோ செல்லும் பாண்ட், அங்கு இருப்பவர்களை கொன்று, அங்கு இருந்த தப்பித்த மார்கொ சிகாரியோவை துரத்துகிறார். ஹெலிகாப்டரில் நடக்கும் சண்டக்காட்சியில் சிகாரியோ இறந்து விட அவரிடம் இருந்து ஆக்டோபஸ் முத்திரை குத்தப்பட்ட மோதிரத்தை எடுத்துக்கொண்டு லண்டன் திரும்புகிறார் பாண்ட்.

ண்டனில் பாண்டை புதிதாக நியமிக்கப்பட்ட M சஸ்பெண்ட் செய்ய, அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ரோம் செல்கிறார். பாண்ட் வேலை செய்யும் ரகசிய குழுவான "00" வை காலாவதி ஆகிவிட்டது என சொல்லி கலைத்துவிட ஏஜென்ட் C மும்முரமாய் திட்டம் தீட்டுகிறார்.பிரிட்டனிடம் நைன் ஐஸ் என்கிற உலகளாவிய நிறுவனத்தில் சேருமாறு ஐடியா வேறு தறுகிறார் C. ரோமில் சிகாரியோவின் மனைவி லூசியாவை (ஐ! மோனிகா பெல்லூச்சி ) சந்திக்கிறார் பாண்ட்.

அவர் மூலம் ஸ்பெக்டர் மீட்டிங் பற்றி தெரிந்து கொண்டு, சிகாரியோவின் மோதிரத்தை வைத்து அந்த மீட்டிங்கிற்கு செல்கிறார் பாண்ட். அங்கு குழுவின் தலைவரான ப்ளோஃபெல்ட் (blofeld) “ வா ஜேம்ஸ் பாண்ட்” என கூப்பிட , பதறிப்போன பாண்ட், அங்கு இருந்து தப்பிக்கிறார்.பாண்டிற்கும் கூலிப்படை ஹின்க்ஷிற்கும் இடையே தெறிக்கவிடும் கார் சாகசக் காட்சி ஒன்று நடக்கிறது. அங்கு இருந்து ஆஸ்திரியா செல்லும் பாண்ட், வொயிட்டை என்பவரை சந்திக்க, அவர் அவரது பெண்ணான மேடலின் ஸ்வானை (லியா செடக்ஸ் ) பாதுக்காக்க சொல்கிறார்.

அந்தப்பெண் மூலம் தான் ஸ்பெக்டர் பற்றி மேலும் அறிய முடியும். பாண்டும் ஸ்வானும் மொரோக்கோ ஹோட்டலில் இருக்கும் குறீயிடுகளை வைத்து ஒரு பாலைவனத்திற்கு ரயிலில் செல்கிறார்கள். அங்கு பாண்ட் ஒபெர்ஹாசரிடம் மாட்டிக்கொள்ள ,ஒபெர்ஹாஸர் ஃப்ளாஷ்பேக் எல்லாவாற்றையும் சொல்கிறார்.தான் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்து இப்போது ப்ளோஃபெல்ட் என்னும் பெயரில் ஸ்பெக்டரை நடத்துவது இவர் தான்.

ஏஜெண்ட் சியும் அவர்கள் ஆள் என்பது தான் ட்விஸ்ட். அதற்குள் பாண்ட், அவரது கைக்கடிகாரத்தை வைத்து அந்த கட்டிடம் முழுவதையும் தரை மட்டம் ஆகிவிட்டு (நம்புங்க ) ஸ்வானோடு தப்பிக்கிறார். நைன் ஐஸ்யும் ஒழிக்க வேண்டும் என்பதால் லண்டன் திரும்புகிறார் பாண்ட்.பிறகென்ன, எப்போதும் போல் இறுதியில் வெல்வது பாண்ட் தான். படம் சுமார் என முன்னாள் பாண்டான 'பியர்ஸ் ப்ராஸ்னன்'னே' கருத்து தெரிவித்து இருந்தாலும், பாண்ட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

-கார்த்திகேயன்.கே.ஜி

எடிட்டர் சாய்ஸ்

[X] Close