Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜிராவ் மஸ்தானி - படம் எப்படி?

பதினெட்டாம் நூற்றாண்டில், மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வாக இருந்த பாஜிராவ்(ரன்வீர் சிங்) , மஸ்தானி (தீபிகா படுகோன் ) இருவருக்கும் இடையே நடந்த காதல் காவியம் தான் பாஜிராவ் மஸ்தானி.ராவ் என்கிற மராத்திய நாவலை மையமாக வைத்து, பாஜிராவ் மஸ்தானியை இசையமைத்து, இயக்கி இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. அரதப்பழைய கதையாக இருந்தாலும்; ஒளிப்பதிவு,இசை,கலையமைப்பு,வசனம் என எல்லா டிப்பார்ட்மெண்ட்டும் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். மராத்திய மன்னருக்கு கீழ் பணியாற்றிய பேஷ்வா பாஜிராவ், மராத்திய சாம்ராஜ்யத்தை போர்களை மேற்கொண்டு விரிவுபடுத்திக்கொண்டு இருந்தான். அவனிடம், தன் நாட்டிற்காக உதவி கேட்டு வருகிறாள் மஸ்தானி. மஸ்தானியின் வீரத்தில் பாஜிராவ் மயங்க, உதவி செய்ய சம்மதிக்கிறான். போரில் வென்றதும், பாஜிராவ் தன் கத்தியை மஸ்தானிக்கு பரிசாக தருகிறான்.மஸ்தானியின் தாய் இஸ்லாம் மதத்தை சார்ந்தவள்.

பாஜிராவும், மஸ்தானியும் காதல் கொள்கிறார்கள். பாஜிராவின் மனைவியான , காஷிபாய் (பிரியங்கா சோப்ரா ), தாய் என எவரும் இதற்கு சம்மதிக்கவில்லை. வேற்று மத பெண்ணான மஸ்தானியை மாளிகைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.அந்தப்புரத்தில் ஆடும் பெண்களோடு மஸ்தானி தங்கவைக்கப்படுகிறாள். மஸ்தானிக்கென தனியாக மஸ்தானி மஹாலை கட்டுகிறான் பாஜிராவ். காஷிபாய்க்கும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயம், மஸ்தானிக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது.மஸ்தானி தன் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைக்க, அடுத்த எதிர்ப்பு கிளம்புகிறது. கிருஷ்ணா என்கிற பெயரை சூட்டுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

தன் மகனுக்கு ஷாம்ஷெர் என பெயர் வைக்கிறான். தன் மனைவிக்கு இடம் அளிக்காத ஊரில் பேஷ்வாக இருக்க மனமின்றி பாஜிராவ் பொறுப்புகளை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான்.பாஜிராவ் போருக்கு செல்லும் சமயம், பாஜிராவின் மூத்த மகன் மஸ்தானியை சிறை பிடிக்கிறான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஓவியம் போல் இருக்கிறது.கண்ணாடியால் செய்யப்பட்ட மாளிகை கலையின் உச்சம்.முடிவு தெரிந்த ஒரு கதை மெதுவாக நகர்வதைத் தவிர படத்தில் வேறு ஒரு குறையும் இல்லை.படத்தின் பல காட்சிகளில் வேண்டுமென்றே காவி,பச்சை நிறங்களை குறித்த சொல்லாடல் வருகிறது.”எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது;அன்பிற்கு மதம் கிடையாது.

அன்பே ஒரு மதம் தான் “ என படத்தில் பல வசனங்கள் தெறி ரகம். தொடர்ச்சியாக பல போர்களை வெல்லும் பாஜிராவ், உடல்நலக்குறைவால் நாடு திரும்பாமலே இறக்கிறான்;அதே சமயம் மஸ்தானியும் சிறைக்குள் இறக்கிறாள்.கடைசி போருக்கு செல்லும் முன் பாஜிராவ் மஸ்தானியிடம் , “சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் தோன்றும் ஒரு நாளில், சூழ்ந்து இருக்கும் சருகுகளை துடைத்து எறியும் அளவிற்கு காலம் தவறி மழை பெய்யும், அந்த நாளில் நாம் இணைவோம் “ என சொல்வான்.

அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் இருவரும் இறப்பார்கள். கடந்த வாரம் வெளியான பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு, பேஷ்வாக்கள் தரப்பிலும், இஸ்லாமியர்களும் தரப்பிலும் பல மாநிலங்களில் போராட்டம் நடந்தது.பாஜிராவ், மஸ்தானி இறப்பிற்குப் பின் ஆயிரம் முறை அவர்கள் இந்த மண்ணில் பிறந்து இருக்கலாம். இருந்தும், பாஜிராவ்களும், மஸ்தானிகளும் சேர்ந்து நிம்மதியாய் வாழ்வதற்கு உரிய அந்த நாள் இன்னமும் இங்கு வரவில்லை.

-கார்த்தி-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close