Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேய் இருக்கா... இல்லையா...? - ‘களம்’ விமர்சனம்..!

ஆட்களை மிரட்டி சொத்துகள், வீடுகள் என ஊர் ஊராக மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் வளைத்துப் போடும் தாதாவாக மதுசூதன். பலரையும், மிரட்டி, சில இடங்களில் கொலைகளும் செய்து கூட இடங்களை வளைக்கிறார். அப்படித்தான் வாரிசில்லா பிரம்மாண்ட அரண்மனையை தன் மகன் சீனிக்காக வாங்குகிறார் மதுசூதன்.

அப்பா, அம்மாவை எதிர்த்து மனைவி லட்சுமி பிரியாவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் வந்த மகனை சின்ன கோபங்களுடன் ஏற்றுக்கொண்டு அந்த வீட்டில் தங்க வைக்கிறார் தாதா அப்பா. லட்சுமிக்கு ஆரம்பிக்கிறது பாராநார்மல் ஆக்டிவிட்டிகள். பய வேட்டையில் லட்சுமி கண்களில் சிக்குகிறது வீட்டின் பின்புறம் இருக்கும் இரண்டு சமாதிகள். யார் இவர்கள் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை..

மதுசூதன் தாதாவாக ஒரு காட்டு காட்டி” நான் இந்த வீட்டில் ஒரு ராத்திரி தங்கிக் காட்டுகிறேன்” என சவால் விட்டு அங்கே பயந்து சுருண்டு, டார்ச் லைட்டுக்கு இடையில் மிரளுவதும் என ஒரு சில காட்சிகளே வந்தாலும் படத்துக்கு ப்ளஸ். லட்சுமி ப்ரியா தியேட்டர் ஆர்டிஸ்ட். அந்த அனுபவம் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் வெளிச்சம். ”என் மேல ரத்தம் கனி”, “நான் சொன்னேன்ல இந்த வீட்ல என்னமோ இருக்குன்னு” என படத்தின் ஓட்டத்துக்கு கைகொடுப்பதே லட்சுமிதான்.

சீனி, அம்ஸத் கான், பூஜா, வேலைக்காரியாக வரும் கனி, என அவரவர் பங்கை சரியாகச் செய்து கடந்து போனால், திடீர் என்ட்ரீ கொடுக்கிறார் நாசர். மிகச்சிலக் காட்சிகள்தான். ஆனால், படத்தின் கதையே அவர்தான் என்பதற்கு நல்ல தேர்வு. ஆனால் நடிக்கத்தான் அந்த அளவுக்கு இடம் இல்லை.

பாழடைந்த பங்களா. அதே பங்களாவுக்கு வெள்ளை அடித்து அழகாகக் காட்டியதும் என ஆர்ட் டைரக்‌ஷன் அள்ளுகிறது. அதற்காக மீண்டும் மீண்டும் நைட் எஃபெக்ட்டில் பங்களாவைக் காட்டுவது கடுப்பு மொமன்ட். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அகோர முகம், குழந்தையை அலேக்காக அந்தரத்தில் நிப்பாட்டிய இடம் என சில காட்சிகள் சின்னதாக மிரட்டுகின்றன. ஆனால், ’இப்போ பாரேன் பின்னாடி பேய் வரும்... இப்போ பாரேன் ஷவர்ல தண்ணிக்கு பதிலா ரத்தம் வரும்... அதோ கருப்பு உருவம்... கப்போர்டுக்குள்ள சத்தம்” என பேய் படங்களுக்கான அலுத்துப் போன வஸ்துகள்.

எங்கேயோ இடிக்குதே, லாஜிக் உதைக்குதே, அந்த சீன் எதுக்கு, அந்த மேஜிக் மேன் யாரு என பல கேள்விகள் நம்மை உறுத்திக்கொண்டே இருக்க, முடிவில் அத்தனைக்கும் கொடுக்கும் பதில் படம் நெடுக இருந்த கேள்விகளை க்ளீன் போல்டாக்குகிறது!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்