Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

சின்னத்திரையில் தங்களின் வித்தியாச பார்முலாவால் கலக்கிய 'லொள்ளு சபா' டீமின் பயாஸ்கோப் அவதாரம் 'தில்லுக்கு துட்டு'.

ஏரியாவிற்குள் லந்து விட்டுக்கொண்டு சுத்தும் வெட்டி ஹீரோவாய் சந்தானம். ஸ்கூலில் ரப்பர் கொடுத்து வந்த காதலுக்காக, ஐந்தோ ஆறோ வயதில் பிரிந்த சந்தானத்தை, 18 வயதில் ஃபாரினிலிருந்து ரிட்டர்ன் வந்த ஹீரோயின் சனாயா தேடுகிறார். (சிரிப்பு வருதா.. அதான் காமெடி படமாச்சே!) அப்புறமென்ன? நீங்கள் கணித்த கதைதான். சந்தானம்தான் அந்த நண்பன் எனத் தெரிந்து காதலில் விழுகிறார். சனாயாவின் பணக்கார அப்பாவான சௌரப் சுக்லா இதை எதிர்க்கிறார். சந்தானத்தைத் தூக்க என மொட்டை ராஜேந்திரனோடு ஸ்கெட்ச் போடுகிறார். என்ன ஸ்கெட்ச், சந்தானம் எப்படித் தப்பிக்கிறார், இதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை.

ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என சந்தானம் முழுமூச்சாய் இறங்கியிருக்கும் படம் இது. ஆக்‌ஷனில் பாஸ்மார்க். டான்ஸில் பார்டர் பாஸ். காமெடியில் வழக்கம்போல் சிக்ஸர், ஃபோர் என செஞ்சுரி. குபீர் ஒன்லைனர்களால் நமக்கு அலுப்பு தட்டாமல் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒரு ஹீரோ, ஹீரோவாக இருந்துகொண்டே காமெடி செய்வதற்கும், காமெடியன் ஹீரோயிஸம் செய்வதற்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதைப் பிடித்துவிட்டாரென்றால்... சக்ஸஸ்தான். அடுத்தடுத்த படங்களில் செய்வாரென்று நம்புவோமாக.

 

ஹீரோயின் - ப்ச்! இதுவரை பாம்பேயில் இருந்துவந்த ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதை இம்மி பிசகாமல் செய்கிறார். லிப் சிங்க், ஓவர் ஆக்டிங் ஆகியவற்றைக் கூட மன்னித்துவிடலாம். அது ஏன் ஜி.. பேய்க்கு போட்டியா அவ்வளவு மேக்கப்? ஒரு காட்சியில் மட்டும் வருகிற பேய் ஹோட்டல் மல்லிகாவாக வரும் சாந்தினி, ஹீரோயினை விட ஆவ்ஸம்..!

கருணாஸிடம் ‘அரை மணி நேரத்தில் 29சி வரும்' என்பதும்,  ரோல்ஸ்ராய்ஸ் - குட்டி யானை படலமும், ரீல் - ரியல் பேய் கலாட்டாக்களும் படத்தின் மைலேஜ் மீட்டர்கள். ஆனந்தராஜ் ஒரு சீனில், ‘கொஞ்சம் காமெடி பண்ணினா வில்லன்கறதையே மறந்துடறீங்க’ எனும்போது தியேட்டர் அதிரக் கைதட்டல்கள். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டீர்களே பாஸ்.. இன்னும் கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.    
இதுதவிர கருணாஸ், சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர்,  மொட்டை ராஜேந்திரன் என எக்கச்சக்க நடிகர்கள் படம் முழுக்க. ஆனால், ஏனோ  காமெடி மட்டும் மெட்ரோ குழாய் தண்ணீர் போல... அவ்வப்போது வருகிறது!

சந்தானம் போதும் படத்திற்கு என இயக்குனர் ராம்பாலா முடிவு செய்திருப்பார் போல. கதை, திரைக்கதைக்கு எல்லாம் மெனக்கெடவே இல்லை. பழகிய கதை என்பதால் முதல் பாதி முழுக்க அலுப்பு. எல்லா படங்களையும் கலாய்த்துத் தள்ளிய லொள்ளுசபா ராம்பாலா, தன் படத்தையும் கலாய்க்க ஏதுவாகவே இயக்கியிருக்கிறார்.

பாடல்கள் - ஸாரி தமன்! பின்னணி இசை கார்த்திக் ராஜா. ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் கெத்து காட்டி, பின் வழக்கமான பேய்க்கதறல்கள்தான்.

இரண்டாவது பாதியில் பேயின் ஆட்டம் தொடங்கியதும் பரபரப்பு தொற்றுகிறது. ஒளிந்து கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரனின் கதவை பேய் சாத்த, அவர் பதறும் காட்சி ஒரு சாம்பிள்!   அந்த 20 நிமிட காமெடி கதகளி மட்டுமே போதாதே? இது காமெடி படமா, பேய் படமா, இல்லை ஸ்ஃபூப் ரகமா என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. மூன்றையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். அதுவும் திபெத் சாமியார் வருவதும், சந்தானத்தின்  உடலில் இருந்து ஆத்மா மட்டும் போய் முருகனின் வேல் கொண்டு பேயைக் கொல்வதும்... விட்டலாச்சார்யா காலத்து டெக்னிக் பாஸ்! முடியல...!  

டம்மி பேய், ஒரிஜினல் பேய் என்று செம லீட் பிடித்தவர்கள் அதை வைத்துக் கொண்டு காமெடி கதம்பமாலையே அணிவித்திருக்கலாம். ஆனால், ஒற்றைப்பூவை நீட்டியிருக்கிறார்கள்.

வாங்கிக் காதில் வைத்துக்கொண்டு வரலாம்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close