Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த டிராகன் ‘ரொம்ப’ நல்லவன்! - Pete's dragon review

via GIPHY

இன்று வெளியான இரு ஹாலிவுட் படங்களுமே ரீமேக் படங்கள் தான். 1977-ம் வெளியான பீட்டீ'ஸ் ட்ராகனைத்தான் ரீமேக் செய்து இருக்கிறார்கள். முதல் முறையைப்போல, இந்த முறையும் டிஸ்னிக்கு இந்தப் படம் லாபம் தான்.

ஒன்றை இழக்கும் போது, அதைவிட அதிகமாகவோ அதற்கு நிகராகவே, ஏதோ ஒன்று நிச்சயம் நம்மை வந்துசேரும். அப்படி பீட்டிக்கு வந்து சேர்ந்த அதிசயமே எலியட். இருவருக்குமான நட்பே பீட்டீ'ஸ் ட்ராகன். 

அன்று பீட்டிக்கு ஐந்துவயது. மகிழுந்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஏற்படும் விபத்தால் பெற்றோர்களை இழந்து, காட்டில் தனித்து விடப்படுகிறான். அங்குள்ள ஓநாய்கள் போன்ற கொடிய விலங்குகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறான். அந்த நேரத்தில் பீட்டியை அரவணைத்து காப்பாற்றுகிறது எலியட், பச்சை ரோமமும், சிவப்பு கண்களுடன் நிமிர்ந்து நிற்கும் டிராகன் . ஆறுவருடம் காட்டிலேயே எலியட்டின் நட்புடன் வளர்கிறான் பீட்டி. பிறகு மனிதர்கள் கண்ணில் பட வித்தியாசமாக பார்க்கும் பீட்டியை கண்டுபிடித்து நகரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவன் மூலமாக காட்டில் இருக்கும் டிராகனும் மனிதர்கள் கண்ணில் பட, டிராகனை பிடித்துச் செல்கின்றனர் அங்குள்ள வேட்டையாளர்கள். எலியட் டிராகன் நிலையென்ன, பீட்டி காட்டிற்குச் சென்றானா என்பதை அழகியலுடன் கற்பனையையும் கலந்து தொட்டுச்செல்கிறது பீட்டீஸ் டிராகன்.  

திரைமுழுவதையும் ஆக்கிரமித்து, நிமிர்ந்து நிற்கும் டிராகன் தான் என்றாலும், பீட்டி சிறுவயதில் படித்த கதைப்புத்தகத்தில் வரும் நாய்குட்டிப்போலவே, பீட்டியுடன் பழகும். டிராகன் என்றால் அச்சுறுத்தும், கொடிய மிருகமாக மட்டுமே இத்தனை நாட்களாக ஹாலிவுட்டில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த டிராகன் யாரையும் பயமுறுத்தாமல் பீட்டியின் சிறந்த நண்பனாக எமோஷனிலும் கலக்குகிறது. துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் கூட, துப்பாக்கியை வளைத்து உடைத்துவிட்டு தேமே என நிற்கிறது. ஆனால், இந்த அப்பாவி ட்ராகனுக்கு U/A சான்றிதழ் கொடுத்து இருக்கிறது இந்தியா சென்சார் போர்டு.

கடந்த வருடம், தி குட் டைனோசர் என்னும் திரைப்படம் வெளியானது. டைனோசராகட்டும், டிராகன் ஆகட்டும், மனிதன் சமீப காலங்களில் பார்க்காத உயிரினங்கள்.  அடுத்த தலைமுறைக்கு அவை நல்லவை என காட்ட நினைக்கும் ஹாலிவுட்டிற்கு நன்றி . 

via GIPHY

காட்டை காப்பாற்ற நினைப்பவர்கள் ஒருபுறமிருக்க, காட்டை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பதையும் பாடமாக போகிறபோக்கில் சொல்லிச்சொல்கிறது. காட்டிலேயே வளர்ந்த பீட்டி முதன்முறையாக நகரத்தை பார்க்கும்போது அஞ்சி ஓடும் காட்சிகள், புதிதுபுதிதாக பார்க்கும்போது ஆச்சர்ய பார்வை என்று நடிப்பில் ஸ்கோர் செய்கிறான் சிறுவனாக நடித்த Oakes Fegley. 

டிராகன் படம்  என்றாலும், ஆமை போல் நகர்கிறது கதை.ஆனால் டேனியல் ஹார்ட்டின் பின்னணி இசையும், அட்டகாசமான விஷுவலும் படத்தை ஒன்ற வைக்கிறது. தவிர, டிராகனை பிடித்துச் செல்லும்போது, கழுகு பார்வையில் கேமிரா நகரும்போது இதயத்துடிப்பை மட்டும் பின்னணி இசையாக கொடுத்திருப்பது நச். 

 காட்டிலேயே வளர்ந்த சிறுவன், மனிதர்களையும், நகரத்தையும் பார்க்கும் பார்வையை இன்னும் விரிவாக, கூடுதல் காட்சிகளில் சொல்லியிருக்கலாம் என்றும், சின்ன கதையை ஒரு படமாக்குவதற்காக இன்னும் கூடுதல் காட்சிகள் சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதும் குறையாக தெரிகிறது. 

 படத்திற்கான முடிவை குழந்தைகளுக்கேற்றவாறு மகிழ்ச்சியுடன் முடித்திருப்பது சிறப்பு..... 

இந்த ஆண்டு வெளியான குழந்தைகள் திரைப்படத்தில், ஒரு பெட் டைம் ஸ்டோரி ஃபீல் தரும் படமாக பீட்டீஸ் ட்ராகன் அமைந்து இருக்கிறது. டோன்ட் மிஸ் கிட்ஸ்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close