Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலைகார மெக்கானிக்!- #MechanicResurrection படம் எப்படி?

ஜேம்ஸ் பாண்ட், போர்ன்(Bourne) சீரிஸ், மிஷன் இம்பாஸிபிள் எல்லாம் அசரடிக்கும் அதிரடி படங்கள் என்றால், ஜேசன் ஸ்டேத்தம் படங்கள் வேற லெவல் அதிரடி. .50 வயதை நெருங்கும் ஸ்டேத்தம் தான் கடந்த 15 ஆண்டுகளாக ஹாலிவுட்டின் ஆசம் ஆக்‌ஷன் ஹீரோ. ஸ்டேத்தம் நடித்து 2011-ம் ஆண்டு வெளியாகி தாறுமாறு ஹிட் ஆன படம் தி மெக்கானிக். சிங்கமே 3 பாகம் வரும்போது ஹாலிவுட் சும்மா விடுமா? செகண்ட் பார்ட்டான மெக்கானிக் ரிசரெக்ஷன் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 

காச கொடு.. காரியத்தை என் கிட்ட விடு என்னும் டெரர் ஹிட்மேன் ஜேசன் ஸ்டேத்தம். அவர் செய்யும் ஒவ்வொரு கொலையையும், விபத்தைப் போலவே மாற்றிவிட்டு தப்பிக்கும் புத்திசாலி. அவரது காதலி ஜெஸ்ஸிகா ஆல்பாவை, வில்லன் கும்பல் கடத்துகிறது. ஸ்டேத்தமிற்கு சிலரை போட்டுத்தள்ளும் அசைன்மெண்ட் தரப்படுகிறது. அவை அனைத்தையும் , அவர் விபத்து போலவே செய்ய வேண்டும். இந்தTerms& Conditionsபடி வில்லனைக் கொன்று, ஹீரோயினைக் காப்பாற்றினாரா என்பதே தி மெக்கானிக் ரிசரெக்ஷன்.

ஒலிம்பிக் நேரத்தில் ரிலீஸ் செய்ய நினைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். பிரேசிலின் ரியோ டி ஜெனெரியோவில் தொடங்குகிறது படம்.அங்கு இருந்து தாய்லாந்து, சிட்னி என 'ஹரி' வேகத்தில் இடம் மாறினாலும், கதை அங்கேயேதான் நிற்கிறது.ரோப் காரில் இருந்து, பாராகிளைடிங்கில் பறக்கும் பெண் மீது ஹீரோ தாவ , "இதெல்லாம் நாங்க லிங்காவுலயே பார்த்துட்டோம் " என்கிறான்  கடைசி வரிசை ரசிகன். ஒவ்வொரு வில்லனையும் ஸ்டேத்தம் நெருங்கவே முடியாது என்ற முடிச்சுகள் செம..ஆனால், அவற்றை  முறியடிக்க , ஸ்டேத்தம் போடும் திட்டங்கள் எல்லாம், ' அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' ரேஞ்சில் தான் இருக்கிறது. 

முதல் பாகமான தி மெக்கானிக் ஹிட் என்றாலும், இரண்டாம் பாகத்திற்கான தேவை எங்கே இருக்கிறது என சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் மோசமான படம் என தி மெக்கானிக் ரிசரெக்ஷனை சொல்லிவிட முடியாது  ஆனால், இதுக்கு எதுக்கு யூ-டர்ன் போட்டு டேபிளை உடைத்து.... 

ஆங்காங்கே வரும் முத்தங்களுக்காக ஜெஸ்ஸிக்கா ஆல்பாவை அவரது ரசிகர்கள் மன்னிக்கலாம், ஆனால், ஸ்டேத்தம் ரசிகர்களை இந்த படம் பெரிய அளவில் சோதித்துவிட்டது.அடுத்த ஆண்டு வெளியாகும் ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் 8-ல் ஆவது ஸ்டேத்தம் கலக்குவார் என நம்புவோம். 

படம் நெடுகிலும் SMOKING KILLS என்பது வருகிறது.ஆனால், ஒரு காட்சியிலும், புகைப்பிடிக்கும் காட்சி வந்ததாய் நினைவில்லை. படத்திற்கு பொருத்தமாய் PART-2 KILLS என வைத்து இருக்கலாம். படத்தின் பெயரை தமிழ்ப்படுத்தினால், தி மெக்கானிக் உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுமாலே இருந்து இருக்கலாம் 

Trailer:

 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close