Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர்கள் இருவரும் கில்லாடிகளா? #Skiptrace படம் எப்படி?

ஜாக்கி சான் படம் எப்போதும் டப்பிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வெளியாகும். அவரின் அதிரடி சரவெடி காமெடி சண்டைக்காட்சிகளுக்காகவே,அந்தப் படங்களுக்கு கூட்டமும் கூடும். 62 வயதான ஜாக்கிசான் தனக்கே உரித்தான போலீஸ் காமெடி கதையில் மீண்டும் நடித்து இருக்கிறார். கடந்த ஜூலையில் சீனாவில் வெளியாகி ஹிட் அடித்த படம், தற்போது இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. ஜாக்கி சானுக்கு தற்போது ஆஸ்கரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பது படத்துக்கு கூடுதல் பிளஸ். ஆனால், அதை எல்லாம் மீறி படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா?

தன் நண்பனின் மரணத்துக்கு காரணமான மெட்டடாரை பழி வாங்க துடிக்கிறார் ஜாக்கி.நண்பரின் மகள் வேறொரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறர. ரஷ்யாவிற்கு தப்பிச்சென்ற ஜானி வந்தால்தான் நண்பரின் மகளை ஜாக்கியால் காப்பாற்ற முடியும். இதற்காக ரஷ்யா சென்று ஜானியை சீனாவிற்கு அழைத்து வருகிறார். நண்பரின் மகளை காப்பாற்றிய பின்,  மெட்டடாரை கண்டுபிடித்து எப்படி பழி  வாங்கினார் என்பது தான் ஸ்கிப்ட்ரேஸ் படத்தின் கதை. 

வீடாக வீடாக தாவுவது, படிக்கட்டுகளில் சண்டை போடுவது, தொழிற்சாலைக்குள் சண்டை என ஜாக்கியின் டெம்ப்ளேட் காமெடி சண்டைகளுக்கு படத்தில்  பஞ்சம் இல்லை.ஆனால், எல்லாமே ஸ்..லோ..மோ..ஷ..னி..ல் செல்கிறது. ஜாக்கி சானிற்கு வயது ஆகிக்கொண்டே இருப்பது, காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. அதையும் மீறி ஜாக்கி சான் பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். 

ஜாக்கி சானைத்தான் பார்க்கத்தான் வருகிறோம். அதற்காக, கதை லாஜிக் எல்லாம் கண்டுக்காதீங்க சுத்தமாக கண்டுக்கொள்ள கூடாது என்றால் எப்படி?  ரஷ்யாவில் இருந்து சீனா வரும்வரை நடக்கும் லாஜிக் களேபரங்களுக்கு எல்லாம் லிங்கா சண்டைகளே தேவலாம் என்கிற ரீதியில் தான் இருக்கிறது. இறுதிவரையில் நம் கபாலி பட வில்லனாக வரும் வின்ஸ்டன் சாவோ தான் மெட்டடார் என பில்ட் அப் செய்துவிட்டு, இறுதியில் ஜாக்கி சானின் இறந்த நண்பர் யங் தான் மெட்டடார் என ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்கள். வில்லன் சஸ்பென்ஸோட சாகலாம், ஆனால்  லொள்ளு சபா சாமிநாதன் போலிருக்கும் யங் எப்படி வில்லன் ஆனான் என்கிற சஸ்பென்ஸோடே ரசிகனை வெளியே அனுப்புவதெல்லாம் ரொம்ப தப்பு இயக்குனர் சார்.

ஜாக்கி சானின் படங்கள் தான் ப்ளூப்பர்ஸ் என்னும் ஒரு விஷயத்தை பிரபலப்படுத்தியது. ஜாக்கி சான் ஜாலியாக சண்டை போடும் காட்சிகளில் எல்லாம , அவருக்கு ஏற்படும் காயங்கள் ஏற்படுவது போல அதில் காட்டப்படும். இதிலும் அப்படிப்பட்ட காட்சிகள் வருகிறது.ஜாக்கி சானின் தீவிர ரசிகர்களுக்கு அது ஒரு நாஸ்டால்ஜியா ஃபீல் கண்டிப்பாகத் தரும்.  மற்றபடி படம் பார்த்து மெச்சிக்கொள்ள ஒன்றும் இல்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close