Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யார் அந்த ஆங்க்ரி மேன்..? - வாய்மை விமர்சனம்

வழக்கத்துக்கு மாறாக வியாழக்கிழமையே வெளியாகிவிட்டன இந்த வாரப் படங்கள். அதில் சாந்தனு, கவுண்டமணி, தியாகராஜன் மற்றும் பலர் நடித்த வாய்மையும் ஒன்று.

செய்யாத கொலைக்காக கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை கைதி ஆகிறார் பிரித்வி. மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. பிரித்வியின் அம்மா பூர்ணிமாவும் இந்த கொலைக்கு உடந்தை என கைதாகிறார். சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவில் எந்தப் பெண்ணும் தூக்கிலிடப்படவில்லை என்பதால் இந்த வழக்கு முக்கியமானதாகிறது. நீதிபதியால் முடிவெடுக்க முடியாமல் போகிறது. அப்போது அவர் எடுக்கும் ஆயுதம் தான் ஜூரி முறை.

அதன்படி பல்வேறு பின்னணியில் இருக்கும் பன்னிரெண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வசம் இந்த வழக்கு கொடுக்கப்படும். 12 பேரும் பேசி, விவாதித்து முடிவு சொல்ல வேண்டும். ஆனால், அந்த முடிவு ஒன்றாக இருக்க வேண்டும். பூர்ணிமாவின் வழக்கு ஜூரி வசம் வருகிறது.

எந்த எதிர்ப்பும் இல்லாததால், 11 பேர் அவரை குற்றவாளி என முடிவு செய்ய, சாந்தனு மட்டும் இல்லை என்கிறார். தனக்கும் அவர் குற்றம் செய்யவில்லை என்பது நிச்சயமாக தெரியாது. ஆனால் கொடுக்கப்பட்டிருக்கும் 2 மணி நேரம் பேசலாம். ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார். சாந்தனுவின் வாதத்தை ஏற்று இன்னும் இரண்டு பேர் சாந்தனு பக்கம் வாக்களிக்கிறார்கள். 

சாந்தனுக்கு எதிர்ப்பக்கத்தில் வலுவாக, பூர்ணிமா குற்றவாளி என்கிறார் தியாகராஜன். சாந்தனு ஒரு எண்ட் என்றால், தியாகராஜன் இன்னொரு எண்ட். இவர்கள் இருவருக்கும் இடையில் நிற்கிறார்கள் மற்ற 10 பேரும். கவுண்டமணி, ராம்கி, ஊர்வசி, பானு, நமோ நாராயண என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. பூர்ணிமாவின் வழக்கு அவர்கள் அனைவரின் பெர்சனல் வாழ்க்கையோடு எதோ விதத்தில் டச் ஆகிறது. முடிவில் என்ன ஆனது? பன்னிரெண்டும் பேரும் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்கள் என்பதுதான் வாய்மை.

12 ஆங்க்ரிமென் (12 angrymen). உலக சினிமா ஆர்வலர்களின் மனதை கொள்ளைக்கொண்ட முக்கியமான படம். அதை ஆரத்தழுவி, முத்தமிட்டு ‘வாய்மை’ ஆக்கியிருக்கிறார் இயக்குநர் செந்தில்குமார். 

ஆங்கில வசனங்களை தமிழுக்கு ஏற்றது போல மாற்றியதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் ஆங்காங்கே தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மாறும் மனிதர்களை காட்சிப்படுத்தியதிலும், அந்த கதாபாத்திரங்களை நம்ம ஊருக்கு ஏற்ப மாற்றியதிலும் ஏமாற்றியிருக்கிறார். ஊர்வசி போன்ற சீசண்ட் நடிகைகள் இருந்தும் கூட, அவர்களை சரியாக பயன்படுத்தாதது மிகப்பெரிய குறை. கவுண்டரை வைத்து நச் என ஒன்றிரண்டு கவுண்ட்டர்கள் கூட கொடுக்க முடியாமல் சோதிக்கிறார்கள்.

இயக்குநரே எடிட்டிங்கும் பார்த்திருக்கிறார்.படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் புகுந்து இம்சை செய்திருக்கிறது அவ்ஹத்தின் இசை. மற்றபடி படத்தைப் பற்றி என்ன பேச...!? 

படம் தொடங்கி மெல்ல மெல்ல பார்வையாளனை தனக்குள் இழுத்துக்கொள்ளும் ஒரிஜினல் ஆங்க்ரிமென். ஆனால், வாய்மையிலோ ரசிகர்களையே ஆங்க்ரி மேன் ஆக்குகிறார்கள்.... ஹ்ம்ம்..! 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close