Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தையைக்கூட டெலிவரி செய்ய முடியுமா? ஸ்டார்க்ஸ்... படம் எப்படி?

 

 

“குழந்தை எப்படிம்மா பிறக்கும்?” என்ற ஒற்றைக் கேள்வியில், பெற்றோரை நாக் அவுட் செய்து திருதிருவென முழிக்கவைத்து விடுகின்றன, வீட்டிலுள்ள குழந்தைகள்.  நிச்சயம் நம்மால் பதில் சொல்லி புரிய வைக்க  முடியாத கேள்வி அது. ஆனால் அதற்கான பதிலை கற்பனைக்கதையாக சொல்லியிருக்கிறது இந்த வாரம் ரிலீஸாகியிருக்கும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ஸ்டார்க்ஸ்.. புக்கிங் செய்தால் வீட்டிற்கே குழந்தை டெலிவரி என்ற ஒன்லைனில் அட்ராசிட்டி செய்யும் நாரைகளின் காமெடி கலாட்டா தான்  3டியில் வெளியாகியிருக்கும் “ஸ்டார்க்ஸ்”. 

 ஸ்டார்க்ஸ்... ஆன்லைனில்  ஆர்டர் செய்தால், செய்த பொருளை வீட்டிற்கே டெலிவரி செய்யும் வெள்ளை நாரைகள் தான் இந்த ஸ்டார்க்ஸ். முன்னொரு காலத்தில் ஆர்டரின் பெயரில், அதாவது எனக்கு இந்த குணாதீசியங்கள், இந்த கலர், இந்த ஹேர்ஸ்டைல், என இந்த ஸ்பெஸிஃபிகேசன்களுடன் குழந்தை வேண்டும் என்று ஒரு லெட்டரில் எழுதி ஸ்டார்கிற்கு அனுப்பி வைத்தால், குழந்தையை இயந்திரத்தில் உற்பத்தி செய்து, வீட்டிற்கே டோர் டெலிவரி செய்வார்கள். அந்த வேலையில் குழந்தைகளின் சுட்டித்தனத்தைப் பொறுக்க முடியாததால், குழந்தைகள் டெலிவரி என்பதை நிறுத்திவிட்டு, பொருட்களை மட்டும் டெலிவரி என்ற முடிவிற்கு வருகிறது ஸ்டார்க்ஸ். டெலிவரி செய்வதில் நம்பர் ஒன் நிறுவனமாகவும் இருக்கிறது. இந்த கூட்டத்தில் இருக்கும் பெஸ்ட் டெலிவரி பறவை தான் ஜூனியர். நாரைகள் கூட்டத்தில்  வசிக்கும் ஒரே பெண் துலிப். படு சுட்டியான துலிப், 18 வருடமாக இயங்காமல் இருந்த குழந்தை மேக்கிங் இயந்திரத்தை ஒரு ஆர்வக்கோளாரில் துலிப் ஆன் செய்துவிட ஒரு பெண் குழந்தையும் உருவாகிவிடுகிறது. நாரைகளில் பாஸ் ஹண்டருக்குத் தெரியாமல், அந்த குழந்தையை  ஜூனியரும், துலிப்பும் டெலிவரி செய்தார்களா? உண்மையிலேயே குழந்தை உருவாக்குவதை ஏன் ஸ்டார்க் நிறுத்திக் கொண்டது? என்பதை காமெடியாக அசத்தியிருக்கும் படம் தான் ஸ்டார்க்ஸ். 

 ஜூனியர் கதாப்பாத்திரம் பாஸ் ஆவதே தனது லட்சியம் என்று அதற்காக போராடுவதும், அதே நேரத்தில் பாஸ் ஆவதற்கு முதலில் துலிப்பை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஹண்டரின் கட்டளையை செயல்படுத்த முடியாமல் திணறுவதும், 'நீ பாஸ் ஆகி என்ன செய்யப் போற? என்ற துலிப்பின் கேள்விக்கு பதில் தெரியாமல் விழிப்பதும், க்ளைமாக்ஸில் எடுக்கும் முடிவுமாக அதன் கதாப்பாத்திர வடிவமைப்பு அழகு.  
இடையிடையே துலிப்பின் குறும்புத் தனமும், அவ்வளவு அழகான அந்த குழந்தையின் சுட்டித்தனமும் படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்கிறது. குறிப்பாக அந்த நரிக் கூட்டத்திடம் மூன்று பேரும் மாட்டுவதும், குழந்தையின் சிரிப்பைப் பார்த்து நரிகள் மயங்கி கொடுக்கும் ரியாக்‌ஷன் , குழந்தையுடன் தப்பிக்கும் ஜூனியரையும், துலிப்பையும் துரத்தும் நரிகளின் சாகசங்கள் அனிமேஷன் கலாட்டா. க்ளைமாக்ஸில் மறுபடி ஒருமுறை அந்த மிஷின் வேலை செய்ய ஆரம்பித்து கோடிக்கணக்கில் குழந்தைகள் உருவாகும் காட்சியும் செம.
இயக்குநர் நிக்கோலஸ் ஸ்டோலர் மற்றும் அவரின் கதையை விஷுவலாக கொடுத்திருக்கும் டாக் ஸ்வீட்லேண்ட்  இருவரும் பாராட்டுக்குரியவர்கள். ஸ்டார்க்ஸ் முழுக்க முழுக்க குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றாலும் குழந்தையுடன் வரும் குடும்பத்துக்கும் என்டர்டெயின்மென்ட் தரும் என்பது கூடுதல் பிளஸ். 

 

 

படம் தொடங்குவதற்கு முன் திரையான  The Lego Ninjago  படத்தின் 5 நிமிட ட்ரெய்லர் செமயாக இருந்தது. வார்னர் பிரதர்ஸின் வெளியீடாக அடுத்த வருட செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது. அனிமேஷன் பட பிரியர்கள் ரெடியாக இருக்கவும் சூப்பர் ட்ரீட் காத்திருக்கிறது.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close