Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு சிங்கம் பாவம்...இன்னொரு சிங்கம் கோவம்... இது கார்ட்டூன் பில்லா! -மோட்டூ பட்லு படம் எப்படி?

சர்க்கஸ் சிங்கத்தை, காட்டு சிங்கமாக்கும் பில்லா டைப் கதை தான். குழந்தைகள் கார்டூனில் பார்த்துப் பழகிய மோட்டு பட்லு கதாப்பாத்திரங்கள் கொண்டு கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுஹாஸ் டி கடாவ். 

சர்க்கஸிலிருந்து தப்பி ஊருக்குள் வருகிறது குட்டு என்ற சிங்கம். அதைப் பிடிக்கும் மோட்லு பட்லுவுக்குப் பிறகு தான் தெரிகிறது அது அடிதடியைப் பார்த்தாலே அரண்டு ஓடும், கேரட்டை மட்டும் உணவாகக் கொள்ளும் வெஜிடேரியன் சிங்கம் என்று. தன்னைக் காட்டில் கொண்டு விடும்படி குட்டு கேட்க, மோட்டு, பட்லு, இன்ஸ்பெக்டர் சிங்கம், டாக்டர் ஜட்கா, கசீடா என ஐவரும் குட்டுவுடன் காடு நோக்கிப் புறப்படுகிறார்கள். காட்டில் ஏற்கெனவே வசிக்கும் சிம்ஹாவைக் (அசப்பில் குட்டுவைப் போன்ற நான்வெஜ் சிங்கம்) கொன்று காட்டுக்குள் இருக்கும் தங்கத்தைக் கைப்பற்றுவதற்காக திட்டம் போடுகிறான் வில்லன் நரசிம்ஹா. ஒரு கட்டத்தில் சிம்ஹா இறந்துவிட, அந்த இடத்தில் சர்க்கஸ் சிங்கமான குட்டுவை வைத்து காட்டைக் காப்பாற்ற திட்டமிடுகிறார்கள் மோட்லுவும் பட்லுவும். அதற்கு குட்டு சம்மதித்ததா? காட்டைக் காப்பாற்றினார்களா என்பதை குழந்தைகளுக்கான ஸ்பெஷல் டச்சுடன் சொல்கிறார்கள்.

"சிங்கம் சர்கஸ்ல இருந்தாலும் சரி காட்டில் இருந்தாலும் சரி அது சிங்கம் தான். அதை சிங்கம் நம்பணும் அவ்வளோ தான்", "காடு இருந்தா தான் நாம இருப்போம், காடு இல்லனா நாமளும் இல்ல" என குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதைப் போல் கவனமாக சில நல்ல விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கும் விதம் சபாஷ்.

அனிமேஷன் படம் என்றதும், ஜங்கிள் புக், அவதார் ரேன்ஜுக்கு இருக்கும் என நினைக்க வேண்டாம். தினமும் உங்கள் குழந்தைகள் டிவி சேனலில் பார்க்கும் அதே மோட்டு பட்லு தான். அதனாலேயே குழந்தைகள் கூட செல்லும் பெற்றோர்களுக்கு நிறையவே பொறுமை வேண்டும். ஆனால், வழக்கமாக டிவியில் பார்த்த கதாப்பாத்திரங்களை 3டியில் பார்க்கும் அனுபவம் கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொண்டாட்டமானது தான்.

ஸ்பெஷல் நோட்ஸ்:

* மோட்டு, பட்லு, இன்ஸ்பெக்டர் சிங்கம், டாக்டர் ஜட்கா, கசீடா என ஐந்து பேருக்கும் ஒற்றை ஆளாய் வித்தியாசம் காட்டி டப்பிங் பேசியிருக்கிறார் சவுரவ் சக்கரபர்த்தி.

* படத்துக்கு நடுவே வரும் 'ஜங்கிள் ஹை' பாடலை ’பாலிவுட்டின் வைரமுத்து’ குல்ஸார் எழுத, இசையமைத்திருக்கிறார் விஷால் பரத்வாஜ்

* படம் தமிழிலிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. 

தமிழ் ட்ரையிலர்


 

 

உங்களுக்குள்ளோ, உங்கள் வீட்டிலோ குழந்தை இருந்தால், ஒரு விசிட் அடித்து விடுங்கள்...

-பா.ஜான்ஸன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close