Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தல படத்தோட பேர் சொல்லு மச்சி!

அஜீத் - விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது தமிழ்த் திரையுலகில் எந்த தலைப்பு வைத்தாலும், உடனே அத்தலைப்பு எங்களுடையது என்று ஒரு அணி கிளம்பி விடுகிறது. வழக்கு.. சர்ச்சை..  என பரபரப்பாகிறது. சினிமாவில் கதையை விட இந்த பேர் ஆசை அதிகமாகி வருகிறது. இதனால் பல்வேறு படங்களுக்கு Production no 2,Production no 3  என்ற தற்காலிக தலைப்பில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படம் முடிவடைந்த உடன் கதைக்கு ஏற்றவாறு தலைப்பு வைத்து வெளியிடுகிறார்கள். அஜீத் படமும் இந்த வகை தான்.  இப்படத்தின் தலைப்பாக 'சுராங்கனி' உட்பட  பல்வேறு தலைப்புகள் இணையத்தில் வெளிவந்தன.

ஆனால் இப்படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான சுபா ( சுரேஷ் ) தனது டிவிட்டர் தளத்தில் " அஜீத் படத்தின் தலைப்பு 'V' என்ற எழுத்தில்  தொடங்கும். இப்போதைக்கு இது மட்டும் தான் தெரிவிக்க முடிவும். அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தனுக்கு "மச்சி! ரசிகர்கள் பின்னி எடுக்குறாங்க... தயவு செய்து தல படத்தோட  தலைப்பு சொல்லு! " என்று டிவிட்டினார்.

தற்போது இணையத்தில் 'வலை', 'சிவந்த மண்' என்ற இரு தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'கொசுறு' கபாலி : " ஒரு டைட்டிலுக்கு போய் இம்பூட்டு டயம் எடுத்துக்கலாமா.. ? "

எடிட்டர் சாய்ஸ்

[X] Close