Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துவங்கியது இந்தியன் பனரோமா திரைப்பட திரைவிழா!

மக்களின் மனதினை ஈர்க்கும் பொழுது போக்கின் உச்சக்கட்டம் சினிமா திரை உலகம். திரைப்படத் தொழில்நுட்பத்தில் தினம், புதிது புதிதாக கண்டுபிடிப்பிகளை திரைப்படங்களிலும் திரையரங்குகளிலும் அமல்படுத்தி திரையரங்குகளில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது படங்கள்.

அதன் பங்காக புது டெல்லியில் அமைந்துள்ள சிரிபோர்ட் ஆடிடோரியத்தில். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் 8 நாட்கள் இந்தியன் பனரோமா திரைப்பட விழா துவிங்கியது.

பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் துவிக்கி வைத்தார், செயலாளர் பிமல் ஜுல்கா மற்றும் பாலிவுட் நடிகர் ஸ்ரீ வினை பாதக் பங்கேற்றனர், அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய கவுர் ஹரி தஸ்தான்-தி ப்ரீடம் பைல் படம் திரையிடப்பட்டது.

திரையரங்கில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள 20 க்கும் மேற்பட்ட ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆட்டம் திரை பொருத்தப்பட்டுள்ளதாள் ஒலியும் காட்சிகளும், வேற லேவுளுக்கு கொண்டு செல்கிறது. எட்டு நாட்கள் நடை பெற உள்ள திரைப்பட விழாவில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைபடங்கள் திரயிடபடுகின்றன.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close