Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் படத்தில் டேனியல் பாலாஜி, நாசர்!

’ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி அடுத்தடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’காக்க காக்க’ மற்றும் ’வேட்டையாடு விளையாடு’ படங்களின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராக பேசப்பட்டவர். பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நிறைவான நடிப்பை தந்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி.  இதில் கூடுதல் செய்தி என்னவென்றால், படத்தின் ஃபிளாஸ் பேக் காட்சியில் திருப்புமுனையாக இவரின் கதாப்பாத்திரம் தோன்றவிருக்கிறதாம்.

அந்த கட்டத்தில் ஏற்படும் ஆக்‌ஷன் காட்சிகள் சத்யதேவாக வரும் அஜித் மற்றும் விக்டராக வரும் அருண் விஜய் என மூவரும் இணைந்த ஆக்‌ஷன் காட்சி எனவும் சொல்லப்படுகிறது. மேலும் நாசரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் தோன்ற இருக்கிறார்.

சில வாரங்களாகவே, எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு ‘என்னைஅறிந்தால்’ சமுகவலைதளங்களிலும், ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை பார்க்காத அஜித்தின் மாறுபட்ட கெட்டப், வித்தியாசமான நடிப்பில் களம் இறங்கும் அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா இதற்கெல்லாம் மேல் கெளதம் படத்தில் என்னாதான் செய்திருக்கிறார் என்று ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள், என்று எதிர்பார்ப்பின் இறுதியில் நாளை “என்னைஅறிந்தால்” வெளிவரவிருக்கிறது.

சில நாட்களாகவே பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய ‘ஐ’, ‘லிங்கா’ படங்கள் எதிர்பார்த்த திருப்தியை அளிக்காததால் தற்போது இந்த படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்புகள் வலுவாகியுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close