Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித், சிம்புவைத் தொடர்ந்து விக்ரம்?

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் படம் ‘ பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் தனது அடுத்த படமாக விக்ரம் ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார். புதிய செய்தியாக படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் ஹாரிஸ் இன்னும் பச்சை கொடி காட்டவில்லை. 

இதனை தொடர்ந்து அடுத்த படமாக விஜய் மில்டன் இயக்கத்திலேயெ மீண்டும் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கௌதம் மேனன் அடர்ந்த காட்டை பின்னனியாக கொண்ட ஒரு புதிய படத்தின் கதையை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

’என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்தக் கட்டமாக விக்ரம் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close