Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று மறைந்த ஹாலிவுட்நடிகர் ஒமர்ஷெரிப் நினைவாக...

டாக்டர் ஷிவாகோ ,லாரன்ஸ் ஆஃப் அரேபியா, நம்ம ஊரில் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய கௌவ் பாய் படமான மெக்கான்ஸ் கோல்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடித்த மாபெரும் நடிகர் ஒமர் ஷெரிப் 83 வது வயதில் நேற்று காலமானார். அவரின் உடல் இந்த மண்ணைவிட்டு பிரிந்தாலும் திரைப்படம் என்ற கலையின் வழியாக என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  சூபி ஞானியைப் போல அவர் வாழ்ந்து காட்டிய திரைப்படமான மான்செயூர் இப்ராகிமை சினிமா விகடன்  பகிர்ந்துகொள்கிறது.

 மான்செயூர் இப்ராகிம் மனதை நெகிழ்விக்கும் அற்புதமான கதையம்சத்தை கொண்ட ஒரு திரைப்படம். சாதாரண வாழ்வில் இருந்து மானுடத்தை ஆன்மிகத்தை நோக்கி நகர்த்தி செல்லும் ஒரு படைப்பு. இப்படத்தை பார்த்த பிறகு மோசஸை போல நம் இதயமும் மென்மையாகி இப்பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடைக்கும் அழகானவற்றை புன்னகையுடன் உணர ஆரம்பிக்கும் . முதலில் மோசஸை பற்றிப் பார்ப்போம்.

1960 களில் பிரெஞ்ச் தேசத்தின் பிரபலமான நகரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்த ஒரு நெரிசலான தெருவின் நடுவில் நேராக படர்ந்திருந்த அந்தச் சாலை மிகவும் பிரதானமான ஒன்று. அந்தச் சாலை எப்போதுமே விலைமாதுக்களால் நிரம்பியிருக்கும் .அந்தத் தெருவில் உயர்ந்திருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில், தான் பிறந்ததிலிருந்து தாயைக் கூட பார்க்காத மோசஸ் தந்தையுடன் வசித்து வந்தான் . மோசசிற்கு பதினாறே வயதாகிறது .அருகில் இருக்கும் பள்ளியில் படிக்கிறான். தந்தை இருந்தும் இல்லாதது மாதிரி தான். தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அந்தக் காதல் இடையிலே தன் பயணத்தை முடித்துகொள்கிறது .

மோசசின் மீது கவனம் செலுத்தவோ, கண்டுகொள்ளவோ யாருமில்லை..த்ருபோவின்  நானூறு உதைகளில் அப்பா அம்மாவின் கவனிப்பு இல்லாமல் தன் இஷ்டப்படி சுற்றி திரியும் அந்தச் சிறுவனை நினைவுகூறும் ஒரு வாழ்க்கை வாழ்கிறான் மோசஸ். தான் சிறுவயதில் இருந்து சேமித்த உண்டியல் பணத்தைக் காமக் களியாட்டங்களில் செலவிடுகிறான். கடையில் திருடுகிறான்.

மோசசின் வாழ்வில் அற்புதமான நிகழ்வாக அவனுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார் .அந்த நட்பு மோசசின் அவலமான வாழ்க்கையிலிருந்து அழகான, அற்புதமான வாழ்க்கையை நோக்கி இட்டுச் செல்கிறது அந்த நண்பர் யார் ?அந்த நட்பு எத்தகையது ?மோசசின் வாழ்க்கை அந்த நட்பிற்கு பின் எப்படி மாறுகிறது .? என்பதைப் பார்க்கலாம் .

மோசசிற்கு கிடைக்கும் அந்த நண்பரின் பெயர் இப்ராகிம் . மோசசின் வீட்டிற்கு அருகில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வரும் அவர் ஒரு சூபி . விடுமுறையே இல்லாமல் எல்லா நாட்களிலும் அதுவும் காலையில் இருந்து நள்ளிரவு வரை கடையைத் திறந்து வைத்திருப்பதால் அருகில் இருப்பவர்கள் எல்லாம் அராப் என்று இப்ராஹிமை அழைக்கிறார்கள் . மனைவியை இழந்த பிறகும் மனைவியின் நினைவாக வாழும் அவருக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும் . எந்த நேரமும் குரானை வாசித்துக் கொண்டிருக்கும் இப்ராகிமிற்கு மோசஸை பற்றியும் அவனின் நிலையைப் பற்றியும் நன்கு தெரியும்.

மோசஸ் அடிக்கடி இப்ராகிமின் கடைக்கு வருகிறான். கடையில் இருப்பதைத் திருடுகிறான். இப்ராகிம் அதைக் கண்டுகொள்வதில்லை . இப்ராகிம் மோசசிற்கு குரானில் உள்ள அற்புதமான விசயங்களையும் ,இந்த வாழ்க்கையைப் பற்றியும் ஒரு தந்தையை போல கற்றுத் தருகிறார்.வயது பேதமின்றி இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். காதலில் இருந்து எல்லாவற்றையும் மோசஸ் இப்ராகிமிடம் பகிர்ந்து  கொள்கிறான். மோசசின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இப்ராகிமிற்கு மோசஸ் புதிய மகனாகிறான். புதிதாக வாங்கிய காரில் இப்ராகிம் தன் சொந்த ஊரான துருக்கியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு மோசஸை அழைத்துச் செல்கிறார். இடையில் ஏற்படும் ஒரு விபத்தில் இப்ராகிம் இறந்து விடுகிறார். மோசஸ் தன் சொந்த ஊருக்குத் திரும்பி இப்ராகிமின் விருப்பப்படி மளிகைக் கடையை நிர்வகிக்க ஆரம்பிப்பதுடன் படம் நிறைவடைகிறது .

இப்ராகிம் ஒரு சூபி என்று தெரிந்த பின் மோசஸ் அதற்கான அர்த்தத்தைத் தேட ஆரம்பிப்பான். இஸ்லாமியத்தின் உள்ளார்ந்த பரிமாணமாகச் சொல்லப்படும் சூபிசம்  என்பது கடவுளை அடைகிற வழியை அறிந்து கொள்ளவும்,மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும் ,தூய்மையடைந்த அந்த மனதை உன்னதமான பண்புகளால் அழகாக அற்புதமாக மாற்றும் ஒரு ஆன்மிகப் பயணம் அல்லது ஒரு அறிவியல் என சூபி அறிஞர்கள் சொல்கிறார்கள் .

இப்ராகிம் மோசஸை கத்தோலிக் ,ஆர்தடக்ஸ் ,மசூதி என எல்லாப் புனிதத் தளங்களுக்கும் அழைத்துச் செல்வார். எல்லாப் புனிதத் தளங்களும் திறந்தே இருக்கிறது .அது யாரையும் தடுப்பதில்லை. மனிதமும் சகோதரத்துவமும் மதத்தை மறைக்கிறது .மோசசிற்கு இப்ராகிம் மீது ஆழ்ந்த நேசம் இருப்பதை அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். மோசசின் தந்தை இறந்த பிறகு அதை கேள்விப்பட்ட தாய் மோசஸை தேடி வருவாள். மோசஸை தாயால் அடையாளம் காண முடிவதில்லை .மோசசும் தந்தை இருக்கும் வரை தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடனும் தான் இருந்தான். தந்தை இறந்த பிறகு இப்ராகிமுடன் ஏற்பட்ட நெருக்கம் ,அவரின் மீதான நேசம் மோசஸை முற்றிலும் மாற்றிவிட்டது.அதுவரைக்கும் தாயைக் காண வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் காத்துக்கிடந்த மோசஸ் தாயைக் கண்டவுடன் தான் மோசஸ் இல்லை முகமது என்று தாயிடமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் .

இப்ராகிம் மோசசுடன் உரையாடும் அனைத்துமே ஆன்மிகமான ஒன்று..ஒரு இடத்தில் மோசசிடம் இப்ராகிம் நீ எதாவது தெரிந்து கொள்ளவோ, கற்கவோ விரும்பினால்
புத்தகத்தைத் தேடிப்போய்ப் படிப்பதை விட யாருடனாவது பேசு என்பார்.
 
மோசஸ் கடையில் திருடுவது இப்ராகிமிற்கு தெரிந்தாலும் அதை கேட்க மாட்டார்.ஆனால் மோசஸ் தான் திருடுவது இப்ராகிமிற்கு தெரியாது என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து திருடி கொண்டே இருப்பான். ஒரு நாள் கடைக்கு  அருகில் சினிமா சூட்டிங் நடக்கும் அதில் நடித்த நடிகை கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்க வருவாள் .அவளிடம் இப்ராகிம் அதிக விலையை சொல்லி விற்பார் இதை அருகில் இருந்து பார்க்கும் மோசஸ் ஏன் இப்படி அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்று கேட்பான். அதற்கு இப்ராகிம் கடையில் இருந்து பொருட்கள் திருட்டு போனதில் ஏற்பட்ட நஷ்டத்தை இப்படித் தான் சரிகட்டுகிறேன் என்பார்.இப்ராகிம் இறந்த சில வருடங்களுக்கு பிறகு பெரிய ஆளாக வளர்ந்திருக்கும் மோசஸ் கடையை நடத்த ஆரம்பிப்பான் .அப்போது கடையில் ஒரு சிறுவன் திருடுவான் .அதை மோசஸ் பார்த்தாலும் தெரியாததை மாதிரி ஒரு
புன்னகையுடன் அந்த சிறுவனுடன் நடந்து கொள்வான். இதுதான் மோசசின் மாற்றம் .இந்த உன்னதமான மாற்றத்தை மோசஸ் கற்றது இப்ராஹீமிடம் .

இப்ராஹீமிடம் இருந்து பிரபஞ்சத்தின் அழகை அற்புதத்தை ஒரு புன்னகையுடன் பார்க்க உணர மோசசுடன் சேர்ந்து நாமும் நிறைய கற்றுக்கொள்கிறோம் இப்ராகிமாக நடித்தவர் இல்லை வாழ்ந்து காட்டியவர் வேறு யாருமில்லை நம்ம ஒமர் ஷெரிப் தான்.

- சக்திவேல்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close