Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறையில்லாத உயிர்கள் உலகில் ஏது? - மை ஷூஸ் குறும்படம்!

குறையில்லாத உயிர்கள் எங்கே இருக்கிறது, மனிதன் , மிருகங்கள் என இந்த உலகின் ஜீவ ராசிகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு குறைகளுடன் தான் இருக்கின்றன. அவன் அப்படி இருக்கிறானே, நாம்மால் முடியவில்லையே என்ற எண்ணம் இல்லாத மனிதர்களும் இல்லை என்றே கூறவேண்டும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கும் குணம் தான் நாம் வாழ்வின் பெரிய முட்டுக்கட்டை என்றே சொல்ல வேண்டும். கிடைத்த வாழ்வை முழுமையாக ரசித்து வாழும் பழக்கம் இருந்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும். இந்த கருத்தை மிக எளிமையாக எடுத்துரைக்கிறது இந்த ‘மை ஷூஸ்’ குறும்படம்.

கதை இதுதான், ஒரு சிறுவன் கந்தல் உடையில், கிழிந்த ஷூக்களுடன் ஒரு பூங்காவில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனது ஏழ்மை நிலை அவனை மிகவும் சோகத்திலேயே வைத்திருக்கிறது. பலரும் சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பூங்காவின் ஒரு இருக்கையில் அமர அந்த இருக்கையின் மற்றொரு மூனையில் ஒரு பணக்கார சிறுவன், நல்ல உடைகள், ஷூக்கள் என போட்டுக்கொண்டு இவனைப் பார்த்து சிரித்து கையசைக்க, இவனோ அவனது ஷூக்களையும் , தனது ஷூக்களையும் பார்த்துவிட்டு சோகத்துடன் அருகில் இருக்கும் மரத்தடியில் சென்று அமர்ந்துகொள்கிறான்.

அங்கே அமர்ந்தவன் மிகவும் வேண்டி விரும்பி நான் அவனாக மாற வேண்டும் என கேட்டு மன்றாட சிறிது நேரத்தில் அவனிடத்தில் இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் பணக்காரனாக இருந்த சிறுவன் இவனது ஏழ்மை நிலையில் மரத்தடியில் மிகவும் சந்தோஷமாக ஓடிக்கொண்டு சுற்றி வருகிறான். சிறிது நேரத்தில் ஒரு வயதான பெண் சக்கர நாற்கலியில் ஏழையாக இருந்து பணக்காரனாக மாறிய சிறுவனை வண்டியில் உக்கார அழைக்கும் போதுதான் உண்மை நிலை புரிகிறது.

இவனுக்கு ஷூக்கள் தான் புதிதாக இல்லாமல் இருந்தன, ஆனால் அந்த பணக்காரனாக இருந்த சிறுவனுக்கோ கால்கள் செயல்பாடாது இருந்திருப்பது அவனுக்கு தெரிய வர மீண்டும் சக்கர நாற்காலியில் சிறுவன் சோகத்துடன் செல்கிறான். நாம் நாமாக இருக்கும் வரை மட்டுமே நமக்கு நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அடுத்தவர் போல் நாம் இல்லையே என எண்ணத் துவங்கி விட்டால் நம்மால் நம் வாழ்வில் சந்தோஷத்தை பெற முடியாது என்பதை வெறும் 3 நிமிடங்கள் 53 நொடிகளில் சொல்லியிருக்கிறது இந்த ஆஸ்திரேலியா நாட்டின் ’மை ஷூஸ்’ குறும்படம். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் நிமா ரவூஃபீ. நிக் ராபின்ஸ், நெட் பால்டெர்ஸ்டோன், இருவரும் முறையே ஏழை மற்றும் பணக்கார சிறுவர்களாக நடித்துள்ளனர். 2012ல் வெளியான இந்தப் படம் பல சினிமா விழாக்களில் பல விருதுகளை பெற்றதுடன் யூடியூபில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த வைரல் வீடியோவாக மாறியுள்ளது. மேலும் வாட்ஸப், முகநூல் உள்ளிட்டவைகளிலும் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

குறும்படத்தைக் காண: 

 

- ஷாலினி நியூட்டன் - 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close