Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈரானியச் சூழலில் பெண்கள் நிலை என்ன? அழகாக விளக்கும் திரைப்படம்

குழந்தைப்பருவம், இளம்பருவம், முதுமைப்பருவம் என்ற மூன்று நிலைகளை மையமாக வைத்து ஈரானில் உள்ள பெண்களின் நிலையை அழகாகச் சொல்கிறது the day i became a woman .

முதல் நிலை ஒரு சிறுமி அவளுக்கு அன்று தான் ஒன்பது வயது ஆகிறது.அவளின் அம்மா நீ பெரிய பெண்ணாகி விட்டாய் இனிமேல் வீட்டை விட்டு வெளியே பசங்களுடன் விளையாடச் செல்லக் கூடாது.இனி பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறாள். சிறுமிக்கு விளையாட்டு என்றால் மிகவும் ஆர்வம் ,அவளால் தான் பெரிய பெண் ஆகிவிட்டேன் என்று அம்மா சொல்வதை புரிந்து கொள்ளமுடிவதில்லை, நான் மதியம் தானே பிறந்தேன்,,இன்னும் மதியம் ஆகவில்லை இன்னைக்கு ஒரே ஒருநாள் மதியம் ஆகும் வரை விளையாடிவிட்டு வருகிறேன் என்று கெஞ்சி அனுமதி வாங்கி தன் நண்பனுடன் விளையாடுவதற்கு செல்கிறாள். அவளின் நண்பனுக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அவன் சிறுமியை காத்திருக்கச் சொல்கிறான் அதற்குள் மதியம் வந்து விடுகிறது அவளின் அம்மா அவளைத் தேடி வந்துவிடுகிறாள் ,அவளுக்கு பர்தாவை போர்த்தி அவளின் விளையாட்டு உலகத்தை இருட்டாக்கி விடுகிறாள்...

இரண்டாம் நிலை திருமணமான ஒரு இளம் பெண் தன் கணவனின் கட்டளையை மீறி சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்கிறாள். பந்தயம் நடந்துகொண்டிருக்கும் போது அவளின் கணவன் பின்தொடர்ந்து வந்து விடுகிறான்,அவளைப் பந்தயத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வரசொல்கிறான் .இல்லையென்றால் விவாகரத்து தான் என்று மிரட்டுகிறான் .கணவன் சொல்வதைக் கேட்காமல் அவள் சுதந்திரமாக பந்தயத்தைத் தொடர்கிறாள் .சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்த அந்த நொடியிலே .அவளுக்கு மிஞ்சுவது விவாகரத்தும் அவமானமும் ஏக்கத்துடன் கூடிய தனிமையும் தான்.

மூன்றாவது நிலை ஒரு பாட்டி ,பாட்டிக்கு இப்போது தான் பரம்பரை சொத்தில் இருந்து பங்கு கிடைத்து நிறையப் பணம் அவளின் கையில் விளையாடுகிறது ,தான் இளம் வயதில் ஏழையாக இருந்த போது ஆசைப்பட்டதை எல்லாம் முதுமையில் வாங்கிக் குவிக்கிறாள் ,அவளுக்கு அருகில் இருக்கும் சிறுவர்கள் உதவி செய்கிறார்கள் ,இளம்வயதில் பணம் இல்லாமல் திருமணம் செய்யமுடியாத ஏக்கத்துடனும் ,தனக்கு உதவிசெய்த சிறுவன் ஒருவனை மகனாக மாற்ற முயற்சிசெய்ததில் கிடைத்த ஏமாற்றத்துடனும் தான் வாங்கிய பொருட்களுடனும் அவள் கப்பலில் பயணம் செய்ய கடலை நோக்கிச் செல்கிறாள் . அவள் வாங்கிய பொருட்கள் எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அதை ஏக்கத்துடன் சிறுமிகளும் ,திருமணமாகாத இளம் பெண்களும் பார்த்துக் கொண்டு இருப்பதோடு படம் நிறைவடைகிறது ..

குழந்தைப் பருவத்தில் ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோரும் குழந்தைகளாக இருக்கிறோம்,அப்போது மிகவும் சுதந்திரமாக உணர்கிறோம் ,ஆனால் வயது ஆக ஆக சிறுமி பெண்ணாக மாறுகிறாள்,,அதிலிருந்து அவளுக்கு கட்டுப்பாடுகளும்,அடக்குமுறைகளும் அதிகமாகின்றன. குழந்தையாக இருந்த போது ஓடி ஆடி யாருடனும் விளையாட ,பேச அவளுக்குக் கிடைத்த சுதந்திரம் பெண் ,மனைவி என்ற நிலையை எட்டிய பின் ஈரானிய சூழலில் எப்படி எவ்வாறு நாலாபுறமும் பறிக்கப்படுகிறது என்பதை அற்புதமாக உணர்த்திய படம். ஈரானில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இதே நிலை தான் தொடர்கிறது என்பதால் இந்தப் படம் நம் சூழலிலும் முக்கியத்துவம் பெறுகிறது.படத்தை இயக்கியவர் மெரிசியா மக்மல்ப்

-சக்திவேல்-

எடிட்டர் சாய்ஸ்

[X] Close