Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாள் சண்டையில் கில்லியாகும் அனுஷ்கா !

'சிங்கம் 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏன் அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிங்கம் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் ஹன்சிகா மட்டுமே பங்கேற்றார், அனுஷ்கா பங்கேற்கவில்லை.

ஹன்சிகாவே முக்கியத்துவம் அளித்ததால் அனுஷ்கா பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அச்செய்தியினை பொய்யாக்கும் விதத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'சிங்கம் 2' பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூர்யாவோடு பங்கேற்றார் அனுஷ்கா.

அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்பைவிட மெலிந்து காணப்பட்டார் அனுஷ்கா. தெலுங்கில் 'ராணி ருத்ரமாதேவி', அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 'பாஹுபாலி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இரண்டு படங்களுமே தனது திரையுலக வாழ்வில் மைல்கல் படங்களாக இருக்கும் என்று கருதுகிறாராம் அனுஷ்கா. அதுமட்டுமன்றி இரண்டிலுமே நடிக்க உடம்பை குறைத்து, குதிரை சவாரி, வாள் சண்டை என அனைத்தையும் கற்று வருகிறாராம் அனுஷ்கா.

ஜுலை மாதம் முதல் ராஜமெளலி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதற்காக இப்போதே படக்குழுவினர் அனைவருமே தீவிர பயிற்சியில் இருக்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close