Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமன்னாவின் வாய்ப்பைப் பறித்த ஸ்ருதி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் ஹிட்டான படம் 'ரமணா.' இந்தப் படத்தைத் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

'வானம்' படத்தின் இயக்குநர் க்ரிஷ், இந்தியில் இயக்கப் போகிறார். விஜயகாந்த் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி தான் நடிக்கப் போகிறார் என தற்போது செய்தி பரவுகிறது.

ஏற்கெனவே அக்‌ஷய் குமாருடன் தமன்னா நடித்துவிட்டதால் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார்கள் என்கிறது படக்குழு.

ஆனால், உண்மை அதுவல்ல. பாலிவுட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என தவித்து வரும் ஸ்ருதி, என்ன மந்திரமோ செய்து தமன்னாவின் வாய்ப்பைப் பறித்து விட்டாராம்.

அக்‌ஷய் குமாருடன் நடிப்பதன் மூலம் தனக்கும் பாலிவுட்டில் நல்ல இடம் கிடைக்கும் என நம்புகிறாராம் ஸ்ருதி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close