Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

 இந்தியாவைத்  தாண்டி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைக் கண்டது ராஜமௌலியின் பாகுபலி. படத்தின் முடிவும், எதிர்பார்ப்பும் என இணைந்து தற்போது இரண்டாம் பாகம் குறித்து தினம் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகையான மாதுரி தீட்ஷித் பாகுபலி 2 ல் நடிக்கப்போவதாகவும், அனுஷ்காவின் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று ராஜமௌலி தெளிவு படுத்தியுள்ளார்.

பாகுபலி 2 ல் மாதுரி இல்லை என்றும், மேலும் அனுஷ்காவின் அக்கா என்ற கதாபாத்திரமே இப்படத்தில் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்படத்திற்காக சூர்யா, ஸ்ரேயா போன்றோர் சிறப்புத் தோற்றத்தில் தோன்ற உள்ளதாக தற்போது அடுத்த செய்தி பரவி வருகிறது. எனினும் ஏற்கனவே சூர்யா பாகுபலி 2ல் கண்டிப்பாக இல்லை என அறிவித்தும் இன்னமும் அந்தச் செய்தி ஓய்ந்த பாடில்லை. அடுத்து ஸ்ரேயா குறித்த தகவல்கள் உலாவி வருகின்றன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்