Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமம் ரீமேக்கில் இவர்களா?

நிவின்பாலி நடிப்பில் அல்ஃபோன்ஸ்புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் “பிரேமம்”. இப்படம் தெலுங்கில் ரீமேக்காகவிருக்கிறது. 

காதலின் பருவ நிலைகளைச் சார்ந்த படமான பிரேமம் படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்வது பற்றி பல பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. தெலுங்கு ரீமேக்கிற்கு “மஜ்னு” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.

பிரேமம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். சாய்பல்லவி (மலர்) கதாப்பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும், மடோனா சபாஸ்டியன் (செலினா) கதாப்பாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் இருவரும் தெலுங்கில் நடிக்கிறார்கள். மலையாளத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் (மேரி) இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் நிவின்பாலியின் தந்தை வேடத்தில் ரெஞ்சி நடித்திருப்பார். அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நாக சைத்தன்யாவின் தந்தையான நாகர்ஜுனா நடிக்கவிருப்பதாகவும் காமெடிக்காக  பிரம்மானந்தம் முதல் பாதியில் நடிக்கவிருக்கிறார்.

காமெடி மற்றும் காதல் என்று டபுள் ட்ரீட் இப்படம் மூலம் உறுதி என்று சொல்லப்படுகிறது.  பிரேமம் படம் முழுக்க மலையாள கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டது.

எனவே தெலுங்கிற்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைக்கும் வேலைகள் நடந்துவருகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்