Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரேமம் ரீமேக் விவகாரம்- முந்திக்கொண்ட தெலுங்குத் திரையுலகம்

நிவின்பாலி நடிப்பில் அல்ஃபோன்ஸ்புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் “பிரேமம்”. இப்படத்தின் தெலுங்கில் ரீமேக் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

பிரேமம் படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்வது பற்றி பல பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், முந்திக்கொண்ட தெலுங்கு திரையுலகம் முதலில் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டது. பிரேமம் தெலுங்கு ரீமேக்கிற்கு “மஜ்னு” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.

பிரேமம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள். சாய்பல்லவி (மலர்) கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும், மடோனா சபாஸ்டியன் (செலினா) கதாபாத்திரத்தில் ஆயிஷா ஷர்மா இருவரும் தெலுங்கில் நடிக்கிறார்கள். மலையாளத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் (மேரி) இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் நிவின்பாலியின் தந்தை வேடத்தில் ரெஞ்சி நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரத்திற்கு நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா நடிக்கவிருப்பதாகவும் காமெடிக்காக பிரம்மானந்தம் முதல் பாதியில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close