Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளிக்காக தயாராகிவரும் தமிழ்ப் படங்கள்!

 
தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதி தியேட்டருக்குச் சென்று புதுப்படங்கள் பார்ப்பது. இதனை ஆண்டாண்டு காலமாகத் தமிழ் ரசிகர்கள் பெரும்பாலோனோர் ஒரு முக்கிய கடமையாகவே கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கும் படங்கள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சிறிய முன்னோட்டம்.    
 
இளையதளபதி திருநெல்வேலி ஸ்லாங்கில் முதன் முதலாக பேசி நடிக்கும் 'விஜய் 60' தீபாவளி ரிலீஸில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் பாக்ஸ் ஆபீசில் இடம்பிடித்துள்ளது. அடுத்ததாக விக்ரமின் 'கருடா' படமும் வெயிட்டிங்கில் உள்ளது. உலக நாயகன் கமலஹாசனின் கனவுப்படமான விஷ்வரூபம்-2 இந்த வருட தீபாவளிக்கு விருந்து வைக்க வருகிறது. 
 
 
* தேவி: தமிழ் படங்களில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா ஹீரோவாக, மற்றொருவர் இயக்கத்தில் நடிக்கும் படம் தேவி. 'பேய்'  படங்களின் வரிசையில் வருகிறது என்கின்றனர் சிலர். இன்னும் சிலர் நயன்தாராவுடனான பிரபுதேவாவின் காதல், மோதல்கள் தான் படத்தின் கதை என செய்திகள் பரப்பியதால்  இந்தப்  படத்துக்கு ஏக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 
* S3: சிங்கம் படத்தின் முதல் பாகம் ஹிட் அடிக்க.. ஹரி அதை தக்கவைத்துக் கொண்டு எடுத்த இரண்டாம் பாகமும் சூப்பர் ஹிட். பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பையும் பெற்றது. எஸ்3 என்பது படத்தின் மூன்றாம் பாக  டைட்டில். தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு கதை மூன்றாவது பாகத்துக்கு நகர்ந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். தீபாவளி ரேஸில் எஸ்3 களம் இறங்கும் என தெரிகிறது.
 
 
* காஷ்மோரா: சமீபத்தில் தமிழில் வந்து கொண்டிருக்கும் படங்களின் தலைப்புகள் புதுமையாகவே இருக்கின்றன. அப்படிப்பார்த்தால், 'பருத்திவீரன்' புகழ் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படமும் வித்தியாசம் காட்டுகிறது. இந்தப் படத்தில் கார்த்தி, நயன் தாரா, ஸ்ரீதிவ்யா காம்பினேஷன்  எதிர்பார்ப்பை அள்ளுகிறது. சரித்திரம் சார்ந்த ஒரு பில்லி சூனிய படமாம். காஷ்மோரா படத்தை 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' கோகுல் இயக்குகிறார். இந்தப்  படத்தின் பல காட்சிகள் பலரையும் பிரமிக்க வைக்கும் என்கிறார்கள். தீபாவளிக்கு அதிரடியாகக்  களமிறங்கவிருக்கும் இந்தப்  படத்தின்  ரசிக  ரெஸ்பான்ஸூக்காக காத்திருப்போம்.
 
* கொடி: தனுஷ் த்ரிஷா அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கொடி. எதிர் நீச்சல் செந்தில் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். தனுஷின் சினிமா பயணத்தில் அவர் முதன் முறையாக  இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இதுதான். அரசியல்+த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டு நகரவிருக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு போலீஸ் வேடம் எனவும் பேசிக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லா வேடமும் தனுஷூக்குப் பொருந்தும்போது நிச்சயம் ரசிகர்களிடையே அவரின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 
 
தீபாவளி ரிலீஸூக்காக காத்திருப்போம்.
 
-வே.கிருஷ்ணவேணி 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close