Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லால்- ப்ரியதர்ஷன் கூட்டணி மெஸ்மரிசம் செய்ததா? #ஒப்பம்- படம் எப்படி?

 

1953ல் பிரிட்டிஷ் இயக்குநர் கென் ஹூயூக்ஸ் இயக்கத்தில் வெளியான படம் 'த டார்க் ஸ்டேர்வே’. அந்தப் படத்தின் தழுவலாக கோவிந்த் விஜயன் ஒரு கதை எழுத அதை மலையாளத்தில் 'ஒப்பம்'மாக இயக்கியிருக்கிறார் ப்ரியதர்ஷன். 

பார்வையற்றவர் வேடத்தில் மோகன் லால், மூன்று வருடத்திற்குப் (கீதாஞ்சலி) பிறகு மோகன் லால் - ப்ரியதர்ஷன் கூட்டணி இணைந்திருப்பது என படத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள். மோகன்லான் -பிரியதர்ஷன் கூட்டணியில் இது 29வது படம் என்கிறார்கள்,.

பார்வை சவால் கொண்ட ஜெயராமன் (மோகன் லால்) அபார்ட்மெண்ட் ஒன்றில் லிஃப்ட் ஆப்ரேட்டராக வேலை செய்கிறார். அங்கு வசிக்கும் ஜஸ்டிஸ் கிருஷ்ணமூர்த்தியின் (நெடுமுடி வேணு) நெருங்கிய நண்பர். மோகன்லாலின் தங்கை கல்யாண வேலைகள் ஒருபுறம், நெடுமுடி வேணுவுடன் ஒருவரைத் தேடி பயணம் ஒருபுறம், என நகர்ந்து கொண்டிருக்கிறது கதை. திடீரென ஒரு நாள் நெடுமுடி வேணு தன் வீட்டில் கொல்லப்பட்டு கிடக்கிறார். வேணுவை சந்திக்க செல்லும் லால் அந்த கொலையாளனைப் பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், கொலைகாரன் தப்பித்துவிடுகிறார். அதை யாரோ வெளியாள் செய்திருக்கிறார் என்பது மோகன்லாலுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவரால் அடையாளம் சொல்ல முடியாது. போலீஸ், லால் தான் கொலை செய்துவிட்டு அதை மறைக்க நாடகமாடுகிறார் என சந்தேகப்படுகிறது. கொலைசெய்தது யார்? எதற்காக கொலை? லால் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா போன்ற மர்மங்களை மிக மெதுவாக அவிழ்க்கிறது இந்த 'ஒப்பம்'. 

த்ரில்லர் + லைட் ஹூமர் காம்போ என்றால் ப்ரியதர்ஷனுக்கு நூடுல்ஸ் போல, மிக எளிதாக செய்துவிடுகிறார். அது படத்தில் நன்றாக வேலை செய்தும் இருக்கிறது. ஆனால், சுவாரஸ்யமாக இல்லை என்பதுதான் சிக்கல்.

மோகன் லால் நடிப்பு பக்கா, பார்வையற்றவராக வாழ்ந்திருப்பது, தவமிருப்பது என ஓவராக செய்யாமல் கதாப்பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது அசத்தல். எல்லோரின் பெயரை மாற்றி அழைத்து காமெடி செய்யும் மாமுகோயா தொடங்கி பேபி மீனாட்சி வரை அத்தனை கதாப்பாத்திரங்களும் நேர்த்தியான நடிப்பு.

ஒரு த்ரில்லர் படம் என்பதாலேயே படத்தில் நிறைய பிரச்சனைகள். படம் தொடங்கி நெடுமுடிவேணு தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லும் அந்த 15 நிமிடங்கள் வரை ஏதோ ஃபேமிலி ட்ராமா போல என நினைக்க வைக்கிறது கதை. விறுவிறுப்பே இல்லாமல் ஒரு த்ரில்லரா என ஆடியன்ஸ் மொபைலை எடுத்து ஏதோ சுறுசுறுப்பான கேம் ஆடத் தொடங்கி மறுபடி த்ரில்லர் சீன் வந்ததும் ஸ்க்ரீனைப் பார்க்கும் அளவுக்கு சோதிக்கிறது திரைக்கதை. 

ரான் ஈத்தன் யோகனின் பின்னணி இசை த்ரில்லருக்கு ஏற்ற மூட் செய் செய்து கொடுக்கிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் திகிலூட்டுகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும் போது வந்தபரபரப்பு தான் இந்தப் படத்துக்கு முழுக்க தேவைப்பட்டது. ஆனால், அது முடிவில் மட்டுமே இருப்பதுதான் பிரச்னை.

ஒப்பம் -மோகன்லால்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close