Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேய் எல்லாம் ஏன் பங்களாவைத்தாண்டி வரமாட்டுது? - ஹாரர் கேள்விகள்!

தமிழ்சினிமாவில் வந்துட்டுருக்குற  நான்ஸ்டாப்பான பேய் படங்களைப் பார்த்துவந்த பேய் டவுட்டுகள்தாங்க இது!                                                                                                                                                                                                                                                   

*முன்னாடிலாம் பேய் படம்னாலே அலறி அடிச்சு ஓடிக்கிட்டு இருந்தது ஒருகாலம்,. இப்போ ஏதாவது காமெடிப்படம் பார்க்கிற ஐடியாவில் இருந்தா, எல்லோரோட சாய்ஸும் இந்தப் பேய் படங்களாதான் இருக்கு. பேய் மேல இருந்த மரியாதையே போய் இப்படி காமெடி பீஸாக மாத்திட்டீங்களே ஏன் பாஸ் ஏன்?

* நிறைஞ்ச அமாவாசை இல்லைனா நிறைஞ்ச பெளர்ணமி, அதுக்கும் மேல போனா துர்காஷ்டமி னு ஒரு தேதியை செலக்டிவா  ஃபிக்ஸ் பண்ணி  அன்னிக்கு மட்டும்  இந்தப்  பேய்கள்லாம் ரொம்ப உக்கிரமா சண்டை போடும்னு காலம்காலமா சினிமாவில் சொல்லிக்கிட்டு வர்றீங்களே,  செல்போனும் கம்ப்யூட்டரும் வெச்சிருக்கிற நம்மளுக்கே சில நேரம் தேதி தெரியாம பதினேழா, பத்தொன்போதானு  கன்ஃபியூஸ் ஆகுது. இந்தப் பேய்கள்லாம் எங்கேதான் சார் போய் காலண்டர் பார்க்குது?

* அப்புறம் இது எல்லோருக்குமே இருக்கிற டவுட்தான். அரசியல்வாதிகளே குடிசைகளுக்குள்ள புகுந்து வெஜ் ரைஸ் சாப்பிட்டு, வெத்தலையை மடிச்சு வாங்கி போட்டுக்கிட்டு ஓட்டு வாங்கிக்கிட்டு இருக்கிறாங்க இந்தப் பேய் மட்டும் பங்களாவைத் தாண்டி வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறதுக்கு என்னதான் பிரச்னையாம். அதை மொதல்ல கேட்டுச் சொல்லுங்க.

*இதைத்தான் ரொம்ப நாளாகக் கேட்கணும்னு இருந்தேன். படத்துல பேய் சீன் வந்தா, மொத்தமா நேருக்கு நேராக வந்துட்டு அது வேலையைப் பார்த்துட்டுப்  போக வேண்டியதுதானே. அதென்ன  திடீர்திடீர்னு மைக்ரோ செகண்ட்ஸ் வந்து பயமுறுத்துறது, அப்புறம்    திடீர்னு காணாமப்போறது அப்புறம் திரும்பி வர்றதுனு 4ஜி நெட்வொர்க் பண்ற  வேலையைலாம் பண்ணிக்கிட்டு இருக்குது? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க.

இதுக்கு மேலயும் ஒரு முக்கியமான டவுட் இருக்குதுங்க, அது என்னன்னு இந்த வீடியோவை க்ளிக் பண்ணித்தெரிஞ்சுக்கோங்க.
 

-ஜெ.வி.பிரவீன்குமார்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close