Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லா டீசரும் ஒரே மாதிரிதான் ப்ரோ ! எப்படினு தெரிஞ்சுக்கலாமா..?

வாராவாரம் ஒவ்வொரு படமும் எப்படா ரிலீஸ் ஆகும்னு வெயிட் பண்ணிட்டு இருந்த காலம் போய் இப்பல்லாம் எல்லோரும் படத்தோட டீசருக்கும் ட்ரெய்லருக்குமே வெயிட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. படத்துக்கு ரிவ்யூ பண்ணவங்க எல்லாம் இப்போ டீசருக்கே 'ஸ்க்ரீன்பிளே நல்லாயில்லை, மியூஸிக் நல்லா இல்லைனு` ரிவ்யூ பண்ணிட்டு இருக்காங்க. இனிமே வாராவாரம் புதுப்பட டீசருக்கெல்லாம் யாரும் வெயிட் பண்ண வேணாம் பாஸு. எல்லா டீசரும் ஒரே டீசர்தான். எல்லாமே இப்படித்தான் இருக்கும். 

1)கபாலி நெருப்புடாடாடாவ் டீசருக்கு முன்னாடியும் சரி அதுக்கு அப்புறமும் சரி எல்லா டீசர்லயும் கண்டிப்பா இருக்கிற ஒரே விஷயம் இந்த நெருப்புதான். வில்லனும், ஹீரோவும் சேர்ந்து மாத்தி மாத்தி எதையாவது கொளுத்திட்டே இருப்பாங்க. எப்போதும் ஏதாவது ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சுங்கிற மோட்லயே இருக்கும். படம் நெருப்பா இருக்கோ இல்லையோ... டீசர்ல மட்டும் நெருப்பா இருக்கும்......நெருப்புல கைவெச்சா விரல் சுடும்னு சொல்றேன். உங்களுக்குப் புரியலையா ப்ரோ.

2) படம் விடிவி மாதிரி ரொமான்டிக் லவ் ஸ்டோரியா இருந்தாலும் டெர்ரர் ஸ்டோரி கணக்கா ஒரே திகிலா காட்டுவானுங்க.

3) படத்தை என்னதான் அரசம்பட்டியில் எடுத்து இருந்தாலும், உலகத்துல இதுவரைக்கும் நீங்க எந்த மேப்லேயும் பார்க்காத லொக்கேஷன்லாம் நீங்க இந்த டீசர்ல பார்க்கலாம். உங்களுக்கு புதுசா கல்யாணம் ஆகி இருந்தா ஹனிமூனுக்கு எல்லாம் போக வேணாம்... ஏதாவது புதுப் பட டீசரைப் போட்டுக் காட்டுங்க. பாட்டுல வர்ற வித்தியாசமான லொக்கேசன் எல்லாத்தையும் டீசர்ல காட்டு காட்டுனு காட்டுறதான் வழக்கம். ஆகமொத்தத்துல எல்லா டீசருமே உலகம் சுற்றும் டீசர்தான். 

4) ஹீரோ எவளோ பெரியா டானோ, போலீஸோ எதுவா இருந்தாலும் டீசர்ல எல்.கே.ஜி ரைம்ஸ் பாடுவாரு.

5 )ஐ யம் வெயிட்டிங், தல, எனக்கு ஆளு இருக்கு ப்ரதர், வாட் ஹாப்பண்ட் பேபி... இந்த மாதிரி காவிய வாக்கியம்லாம் படத்துக்கு சம்பந்தமே இல்லைனாலும் படத்துல கண்டிப்பா இருக்கும்.

6) படம் எந்த ஜானரா இருந்தாலும் சரி படத்தோட டிரெய்லர்ல கண்டிப்பா ஒரு பேய் இருக்கும். ட்ரெய்லர்ல மங்களகரமா சாமியைக் காட்டுன காலம் போய், பேயைக் காட்டுறதே ட்ரெண்ட் ஆகிடுச்சு. படத்தோட ட்ரெய்லர் பாத்துட்டு தியேட்டருக்கு கோஸ்ட தேடி போனீங்கனா எல்லாமே வேஸ்டுதான்.

7) வில்லன் போன்ல கண்டிப்பா ஹீரோகிட்ட யார்டா நீ அப்படின்னு கோபமா கேட்பார்.

8) கீர்த்து சுரேஷ் வாய் கோணறது, சூரி பொண்ணா நடிக்கிறது, லக்‌ஷ்மி மேனனைத் தூக்குறதுனு அபூர்வமான ஷாட் எல்லாத்தையும் டீசர்லதான் காட்டுவாங்க.

9) இப்போ வர்ற டீசர்லலாம் முக்கால்வாசி தீம் மியூஸிக் எல்லாம் எங்கேயோ கேட்ட மயக்கத்துலயே இருக்கும். வேற ஒண்ணும் இல்ல ப்ரோ எல்லாம் சுடச்சுட சுட்டது.

10) கடைசியா முக்கியமானது படத்துல இருக்கிறது எதுவுமே டீசர்ல இருக்காது, டீசர்ல இருக்கிற எதுவுமே படத்துல இருக்காது.


- லோ.சியாம் சுந்தர்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்