Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆந்திராவில் எகிறும் விஜய் ஆண்டனி மார்கெட்!

 

 

'அப்படி இப்படி இருந்தவர்கள்... எப்படி எப்படியோ ஆகிவிட்டார்கள். எப்படி எப்படியோ இருந்தவர்கள்... அப்பட இப்படி ஆகிவிட்டனர்' என்கிற கவிதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாய்  ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு சாலப்பொருந்தும்.  மகேஷ்பாபுவின் 'பிரம்மோற்சவம்'  திரைப்படம் கோலாகல எதிர்ப்பார்ப்போடு ரிலீஸான திரைப்படம்  படுதோல்வியை சந்தித்தது. 


    ஆந்திர மக்களுக்கு அறிமுகமே இல்லாத  விஜய் அண்டனியின் 'பிச்சைக்காரன்' அதேநாளில் ரிலீஸானது. தெலுங்கு டப்பிங் உரிமையை சில லட்சங்களுக்கு விற்றார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு சுக்கிரன் உச்சத்தில் சுழன்று அடிக்க பல கோடிகளுக்கு குவிந்தது வசூல். அப்போது 'குறைந்த விலைக்கு வாங்கி கோடிகளில் சம்பாதித்த விநியோகஸ்தர்கள் உங்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்தனரா?' என்று விஜய் ஆண்டனியிடம் கேட்டனர். 'எனக்கு லாபத்தில் பங்கு வேண்டாம். எனக்கென்று தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் வேல்யூ கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றி' என்று பதில் சொன்னார். 


       அந்த ராசி இப்போதும் வேலை செய்கிறது. தெலுங்கில் 'சைத்தான்' படத்தை பெரும் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதுவும் சில தமிழ் சினிமா ஹீரோக்களின் மார்கெட்டைவிட அதிகமாக..! அதோடு தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் பலரும் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விஜய் ஆண்டனிக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். 

 

சைத்தான் ஹாப்பி அண்ணாச்சி..!


- சத்யாபதி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close