Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமா போஸ்டர்ல இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? குறியீடு பாஸ்!

ஒரு சினிமா எடுத்ததும் அதோட ஃபர்ஸ்ட் லுக்கையே மாஸா ரிலீஸ் பண்றதுதான் இப்போ ட்ரெண்ட். படத்துக்கு ரிவ்யூ பண்ண ஆட்கள் எல்லாம், பாட்டுக்கு ரிவ்யூ பண்ணி, இப்போ ஃபர்ஸ்ட் லுக்குக்கே ரிவ்யூ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்னதான் `ஆண்டனா வெச்ச மொபைல்` யூஸ் பண்ணவங்க எல்லாம் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு அப்டேட்  ஆகிட்டாலும் இந்த போஸ்டர்ல மட்டும் சில விஷயம் இன்னும் மாறவே இல்லை. அப்படி கொஞ்சம்கூட மாறாத சில போஸ்டர் சம்பிரதாயங்கள் ஆஃப் தமிழ் சினிமா என்னன்னு நீங்களே பாருங்க.

* ஹீரோ என்னதான் 'நான் தனி ஆள் இல்லை. எனக்குப் பின்னாடி கும்பலிங் கும்பலிங்கா நிறையப் பேர் இருக்காங்க'னு சொன்னாலும் போஸ்டர்ல மட்டும் தனி ஆளாதான் போஸ் கொடுத்து இருப்பார். படம் லவ் ஸ்டோரியா இருந்தாகூட ஹீரோயினைப் படத்தோட போஸ்டர்ல காட்டி இருக்கவே  மாட்டாங்க. முக்கியமா கதை முழுக்க ஹீரோ கூடவே ஃப்ரெண்ட் வந்தாலும் போஸ்டர்ல அவரை யூஸ் பண்ணவே மாட்டங்க. போஸ்டர்னா போஸ் கொடுக்கிறது மட்டும் இல்லை பாஸ்.

தமிழ் சினிமா போஸ்டர்கள்

* இதுக்கு அப்படியே ஆப்போசிட்டா இன்னோரு போஸ்டர் டெக்னிக் இருக்கு. படத்துல நடிக்கிற சின்னச் சின்ன ஆக்டர்ஸைக்கூட போஸ்டர்ல போட்டுப் பெருமைப்படுத்தி இருப்பாங்க. இதில் முக்கியமான ஒரு விஷயம் அந்தப் படத்துல நடிச்சு, ஆனா படத்துல ஒரு சீன்லகூட வராதவங்களோட முகம் எல்லாம் போஸ்டர்ல தலை காட்டும். எல்லோர் போட்டோவும் போஸ்டர்ல இருக்கணும்னா ஆடியன்ஸ் போட்டோவையும் போஸ்டர்ல போடணும்ல ப்ரோ.

* அடுத்த முக்கியமான திகிலான `ஐஐயோ அம்மம்மா` போஸ்டர் டைப்ஸ் இருக்கு. இந்தப் பேய் பட போஸ்டர்ஸ் எல்லாமே கிட்டத்தட்ட அந்த ஜானர்லதான் வரும். படத்துல பேய் இல்லைனாலும் சரி, கதை இல்லைனாலும் சரி போஸ்டர்ல கண்டிப்பா பேய் இருக்கும். ஏன்னா ஒரு சீன்லயாவது பேயைக் காட்டினாதான் படம்  ஹிட் ஆகும்கிற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா ஆகிட்டதால, எல்லாப் படத்துலேயும் இப்போ பேய்க்கும் ஒரு ரோல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

* பேய் படத்தைப் பற்றிப் பேசிட்டா அடுத்து சாமி படம்தானே ஃப்ரெண்ட்ஸ். பேய் பட போஸ்டர்லயாவது கொஞ்சம் வித்தியாசம் காட்டுவாங்க. ஆனா இந்த சாமி பட போஸ்டர்லதான் குறைந்தது ஆறு வித்தியாசம்கூட காட்டி இருக்க மாட்டாங்க. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், பச்சை புடவையோ, மஞ்சள் புடவையோ கட்டிக்கிட்டு சாமியையே பேய் மாதிரி போஸ் கொடுக்க வெச்சு இருப்பாங்க. அதெல்லாம் இருக்கட்டும்... சாமி பட போஸ்டர் அப்படின்னு சொன்னதும் உங்களும் வேற எதுவும் ஞாபகம் வரலைல.

* இந்த பாயின்ட் அண்டர்கவர் ஆபீஸரும், அலெக்ஸ் பாண்டியன் போலீஸும் களமாடுன போலீஸ் பட போஸ்டர் பற்றிதான். தமிழ் சினிமா போஸ்டர் சம்பிரதாயத்துல மாறாத முக்கியமான விஷயம் இதுதான். அது விஜயசாந்தி ஐ.பி.எஸ்ஸா இருந்தாலும் சரி, சிங்கம், சிறுத்தையா இருந்தாலும் சரி போலீஸ் டிரெஸ்ஸோட ஒரு டெர்ரர் போஸ் கொடுத்து இருப்பாங்க. எல்லாப் படத்துலயும் அப்படித்தான் இருக்கும். ஆமா இந்த மாதிரிலாம் பழைய போஸ்டரையே மறுபடியும் மறுபடியும் போட்டா ஹீரோவோட கொலபசி எப்படி ப்ரோ தீரும்.

சினிமா போஸ்டர்

* தமிழ்ல இப்பலாம் நிறைய வெரைட்டியோட டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வருது. வெரைட்டி ரைஸ் கணக்கா விதவிதமா படம் வந்து என்ன முக்கியம்... போஸ்டர்ஸும் வித்தியாசமா வரணுமே. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தோட போஸ்டர்ல ரெண்டே வகைதான் இருக்கு. ஒண்ணு ஹீரோ ரெண்டு பேரும் ஒண்ணா இருப்பாங்க, இல்லை ஹீரோ ரெண்டு பேரும் தனித்தனியா இருப்பாங்க. அவ்ளோதான் பாஸ்.

* டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு அடுத்து அதே மாதிரி போஸ்டர் ரிலீஸ் பண்றதுதான் இந்த `டூயல் ரோல்` படம். பிரசாந்த் நடிச்ச 'ஜீன்ஸ்' படம்னாலும் சரி, அஜித் நடிச்ச 'வில்லன்' படம்னாலும் சரி போஸ்டர்ல ஒரே போட்டோவை காப்பி பேஸ்ட் பண்ணி  படத்தோட பேருக்கு இந்த சைடும் அந்த சைடும் ஒட்ட வெச்சிடுவாங்க. அட்லீஸ்ட் மீசை வெச்சா இந்திரன் மீசை இல்லைனா சந்திரன் அப்படிங்கிற அளவுக்காவது போஸ்டர்ல வித்தியாசம் காட்டுங்க ப்ரோ. 

 சினிமா போஸ்டர்

* போதிதர்மர் காலத்துல இருந்து காலங்காலமா மாறாம இருக்கிற இன்னொரு டைப் போஸ்டர்தான் கிராமத்துப் படம் போஸ்டர்ஸ். தாடியும், சுருட்டை முடியும் வெச்சு `பியர் கிரில்ஸ்` கூடப் போக பயப்படுற எதாவது ஒரு கருவக்காட்டுல வெச்சு போட்டோ சூட் பண்ணி போஸ்டர் ரிலீஸ் பண்ணுவாங்க. எல்லா கிராமத்து போஸ்டரையும் ஒண்ணா வெச்சுப் பாருங்க. உங்களுக்கே கிறுகிறுனு வரும்!

-லோ.சியாம் சுந்தர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close