Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல! #TrendSetter

யுவன் ஷங்கர் ராஜா

`படம்  வர்றதுக்கு முன்னாடியே நெஞ்சம் மறப்பதில்லை பின்னணி இசை வருதாமே' என்று ஆச்சரியப்படும் ரசிகர்களே.. இது ஒன்றும் யுவனுக்கு புதிதல்ல; யுவன் ஷங்கர் ராஜா செய்த சில ட்ரெண்ட்களின் சில சாம்பிள்கள் இதோ..

ரீமிக்ஸ் 

2004ல் வெளிவந்த 'குறும்பு' என்ற படத்தில் இவர் இசையமைத்த 'ஆசை நூறு வகை' பாடல் தான் ரீமிக்ஸ் ட்ரெண்டை உருவாக்கியது. அதுவரை வெவ்வேறு வகையில் ரீமிக்ஸ் வந்திருந்தாலும், அப்படியே அந்தப் பாடலை எடுத்து புதிய இசையில் வெளியிட்டு ட்ரெண்டாக்கினார் யுவன்.  

சிங்கிள்கள் 

தமிழ்சினிமாவில் முதல்முதலில் படத்தின் ஒரே ஒரு பாடல் சிங்களாக வெளியானது 2001ல் தான் என்றாலும், 2010ல் யுவனும்,சிம்புவும் வெளியிட்ட 'எவன்டி உன்ன பெத்தான்' பாடல் தான் அதை ட்ரெண்டாக மாற்றியது. அந்த ட்ரெண்ட் தான் இன்று வரை தொடர்கிறது.

ஹிப் ஹாப் 

ஹிப்ஹாப் முறையான இசையை தமிழில் முதல்முதலில் தந்தவர் யுவன் தான் என்று பலராலும் சொல்லப்படுகிறது. இதை  ஹிப்ஹாப் ஆதியும் கூட ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவில் இதை பதிவுசெய்திருப்பார்.

பிரபல டப்ஸ்டேப் கருவியை பயன்படுத்தியவர்

தளபதி,தலயில் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை இவர்களுக்கு இன்று போடப்படும் மாஸ்இசையில் டப்ஸ்டேப் என்ற இசைக்கருவி தவறாமல் இடம்பெறும். இன்று பிரபலமாக இருக்கும் அந்த கருவியை தமிழில் முதல்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தவர் யுவன் தான். மூன்று பேர் மூன்று காதல் தான் அந்தப் படம்.

 பிற இசையமைப்பாளர்களுடன் இணைவது 

பல இசையமைப்பாளர்கள் ஒரே பாடலில் பாடிய அதிசயமும் யுவனின் 100 வது படமான 'பிரியாணி'ல் வந்த 'எதிர்த்து நில்'பாடலில் நடந்தது. இதில் இமான், ஜி.வி.பிரகாஷ் குமார், எஸ். எஸ். தமன், விஜய் ஆண்டனி ஆகியோர் பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றவர் இசையிலும் பாட யுவன் ஷங்கர் ராஜாவும் தயங்கியதில்லை. எம்.எஸ்.வி தொடங்கி குறளரசன் வரை இந்த லிஸ்ட் நீளும். மரியான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடியது ஹிட் மேஜிக்.

பின்னணி இசை வெளியீடு  

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த செல்வராகவன்-யுவன் கூட்டணி தமிழ் சினிமாவில் முதன்முறையாக பின்னணி இசையை சிங்களாக  வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மேலே கூறியதை போல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மொத்த பின்னணி இசையும் படத்திற்கு முன் வெளியிடப்படுமாம். இதுவும் தமிழ் சினிமாவில் முதல்முறை தான்.

இது மட்டுமல்லாமல் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்ற ஒரே பாட்டில் மட்டும் 3 வகையாக இசையமைத்தது, ‘புதுப்பேட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக பாங்காக் இசைக்குழுவை இங்கு கொண்டு வந்தது என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த மாதம் 28-ம் தேதி தான் யுவன் முதல் முதலாக இசை அமைத்த அரவிந்தன் படம் வெளியாகியது. இது யுவனுக்கு  20வது வருடம். இதையொட்டி, நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசையை வெளியிட இருக்கிறார் யுவன் என்கிறார்கள்.

 

- ம.காசி விஸ்வநாதன்

(மாணவப் பத்திரிக்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close