Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாச்சியார் படத்தோட கதை இதுவா இருக்குமோ? - ஜாலி கற்பனை #VikatanFun

நாச்சியார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்ததும் அதோட கதை என்னவா இருக்குமுன்னு மல்லாக்க படுத்து மர்மமா யோசிச்சோம். அதோட கதை எப்படி இருக்கும்னு நீங்களே பாருங்க.

நாச்சியார் படத்தின் கதை

சிவகங்கை பக்கத்துல இருக்கிற வேட்டையூர்லதான் படத்தோட கதை ஆரம்பிக்குது. அந்த ஊரே மர்மமான, மார்க்கமான, மரணமான ஊர். கதைப்படி தமிழ்நாட்டுல அப்படி ஒரு ஊர் இருக்கிறதே பல பேருக்குத் தெரியாத அளவுக்குத்தான் அந்த ஊர்ல உள்ள மக்களும் இருக்காங்க. அந்த ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லோருக்கும் ஒரே வேலை குழந்தையைக் குளிப்பாட்டுறது மட்டும்தான். ஒருநாள் காலைல 6 மணி. பொழுது விடியறப்ப கோழி `நியாமாரே'ன்னு கூவுது, அந்த நேரம் பார்த்து அந்த ஊருக்கு கைல விலங்குடன் பெருஞ்சித்தன் (ஜி.வி.பிரகாஷ்) வரார். ஒருகால் நொண்டிக்கிட்டே நடந்து வரார். அப்பதான் ஃப்ளாஷ்பேக் சொய்ங்குன்ன்னு சுத்திக்கிட்டே போகுது. இந்தப் பெருஞ்சித்தன் ஒருவகையில 'பிதாமகன்' பட சித்தனுக்கு தூரத்து சொந்தம். சித்தன் இருந்த சுடுகாட்டுக்கு `நெய்பர்` சுடுகாட்டுலதான் பெருஞ்சித்தன் வளர்ந்தார். அப்ப பேக்ரவுண்ட்ல `சுடுகாட்டில் பொறந்தவனோ, சூடாக வளர்ந்தவனோ...ஓஓஓன்னு`` சங்கு சத்ததோட இசைஞானி சாங். சித்தனுக்கு எப்படி பேச வராதோ அதே மாதிரி பெருஞ்சித்தனுக்கும் பேச வராது. பெருஞ்சித்தன் சுடுகாட்டுல சின்ன வயசுல இருந்து வளர்ந்து அப்பறம் தன்னோட `நெய்பர்` சித்தன் மாதிரியே வாழலாமுன்னு மக்கள் இருக்கிற ஊருக்குள்ள போறான்.

நாச்சியார் படத்தின் கதை

அவன் போற ஊர் வேட்டையூருக்கு பக்கத்துல இருக்கிற கொடுமையூர். அந்தக் கொடுமையூர்ல வாய் பேசாம, சைகையில சாப்பாடு கேட்டு, சைகையில வேலை செஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கார். அந்தக் கொடுமையூர்ல `தண்டா`` அப்படின்னு ஒருத்தன் குழந்தை கடத்தல்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கான். ஒருதடவை குழந்தை கடத்தலைத் தடுக்க சண்டை போட்டு தண்டாவை கடிச்சே கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போறார் நம்ம பெருஞ்சித்தன். ஆனா ஜெயிலுக்குப் போற வழியிலேயே தப்பிச்சு வேட்டையூரோட பக்கத்து ஊரான கோட்டையூருக்கு போறார். ஃப்ளாஷ்பேக் முடியுது. மறுபடியும் சொய்ங். வேட்டையூர்ல ஒரு வீட்டு வாசல்ல புயல்ராணி (ஜோதிகா) உட்கார்ந்து குழந்தையைக் குளிப்பாட்டிக்கிட்டு இருக்காங்க. நம்ம பெருஞ்சித்தன் அமைதியா போய், புயல்ராணி குழந்தையைக் குளிப்பாட்டுறதையே பார்த்துக்கிட்டு 'நந்தா' சூர்யா கணக்கா தலையை 360 டிகிரிக்கு சுத்திக்கிட்டே உட்கார்ந்து இருக்கார். ரொம்ப நேரம் அப்படியே உட்கார்ந்து  கழுத்தும், காலும் வலிக்க ஆரம்பிச்சதும் `வலிக்குது கழுத்து தூங்குறேன் படுத்து'னு  அவருக்குள்ளேயே சொல்லிக்கிட்டு அங்கேயே படுத்துத் தூங்க ஆரம்பிச்சிடுறார். ரொம்ப நேரம் கழிச்சு புயல்ராணி பெருஞ்சித்தனை எழுப்பிவிட்டு சாப்பாடு போடுறாங்க. அதுல இருந்து பெருஞ்சித்தன் புயல்ராணியையும் அந்தக் குழந்தையையும் பத்திரமா பார்த்துக்க கஷ்டப்பட்டு உழைக்கிறான். அங்கதான் அடுத்த சாங் வருது `பெருங்காத்து வீசுதே, பேரழகு பேசுதே'ன்னு பெருஞ்சித்தன் குழந்தையைக் கொஞ்சுற மாதிரிலாம் சீன் வருது. வாழ்க்கை ரொம்பா ஆனந்தமா, அற்புதமா, அட்டகாசமா போகுது. கட் பண்ணா புயல்ராணி எப்போதும் லுங்கியும், ஜீன்ஸ் சட்டையும், நெத்தியில் பட்டையும் போட்டு இருக்கிறதுக்கான காரணத்தைச் சொல்றாங்க. அந்தக் குழந்தையை அந்த ஊர்ல தனியா வாழ்ந்துட்டு இருக்கிற ஜமீன்தார் சைனஸை விட பணக்காரனா மாத்துற வரைக்கும் இந்த லுங்கியையும், ஜீன்ஸையும் மாற்ற மாட்டேன்னு சபதம் எடுத்த கதையை சொல்றாங்க. அதுக்காகவே அந்தக் குழந்தைக்கு மைனஸ்னு பேரும் வெச்சு இருக்கேன்னு சொல்றாங்க. குழந்தை திடீர்னு காணாம போகுது. அங்கதான் இன்டர்வெல்.

நாச்சியார் படத்தின் கதை

இன்டர்வெல்லுக்கு அப்புறம் படம் படுவேகமாவும், படுமோசமாவும் போகுது. குழந்தையை யார் கடத்தி இருப்பாங்கன்னு புயல்ராணியும், பெருஞ்சித்தனும் கூகுளைத் தவிர எல்லா இடத்துலேயும் தேடுறாங்க. அப்பதான் அடுத்த சாங் `தேடித் தேடி பார்க்கிறேன்'ன்னு சோகமா பேக்ரவுண்ட்ல வயலினோட வருது. பெருஞ்சித்தன் படத்தோட ஆரம்பத்துல கொலை பண்ணின தண்டாவோட தம்பி கோடங்கிதான் குழந்தையைக் கடத்தினதுன்னு ரெண்டு பேருக்கும் கடைசியா தெரியுது. ஓ மை காட். பெருஞ்சித்தனைக் கொடுத்தாதான் குழந்தையை விடுவேன்னு கோடாங்கி சொல்றான். இட்ஸ் எ ட்விஸ்ட் ஆஃப் தி ஸ்டோரி. அப்போ புயல்ராணி என்ன பண்றதுனு தெரியாம அங்கேயே தலையில அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைக்கிறா, அங்கயே ஒரு ஒப்பாரி சாங்கும் வருது. குழந்தையைக் காப்பாத்த கடைசியா பெருஞ்சித்தன் கோடங்கிகிட்ட சரண் அடையறான். ரெண்டு பேருக்கும் சண்டை நடக்குது. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கத்தியோட ஓடி வராங்க. வயலின் சத்தம் ஓஓஒன்னு கேட்குது. ஒரே நேரத்துல ரெண்டு பேரும் ஒண்ணா கத்தியில குத்திக்கிட்டு அங்கேயே இறந்து போயிடுறாங்க. புயல்ராணி இறந்துபோன பெருஞ்சித்தனைப் பிடிச்சு அழுதுக்கிட்டு இருக்காங்க. மறுபடியும் சோகமான சாங் வருது. ஒரு லாங் ஷாட். புயல்ராணியும், குழந்தை மைனஸும் மறுபடியும் தனியா இருக்காங்க.

எ ஃபிலிம் பை பாலா.

-லோ.சியாம் சுந்தர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close