Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ கோலிவுட் இல்லுமினாட்டிகளே...இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் எங்கே ? #VikatanExclusive

தமிழ் சினிமால காலங்காலமா சில தீர்க்கப்படாத ரகசியங்கள் இருக்கு. கோலிவுட் இல்லுமினாட்டிகளால் (ஙே!!!) பல காலமா யாருக்கும் தெரியாம மறைச்சு வைக்கப்பட்டிருக்குற சில ரகசியங்கள் எது எதுன்னு தீவிரமா தேடிப்பார்த்தோம். இதோ இதுதான் பாஸ் தமிழ் சினிமாவின் சில `எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்` மொமன்ட்கள்.

*அர்ஜூன் நடிச்ச வாத்தியார் படத்துல வடிவேல் காமெடில கலக்கி இருப்பார். அந்தப் படத்துல வடிவேல் சென்னை கிளம்புறப்ப ஊர்ல உள்ளவங்கக்கிட்ட எல்லாம் சொல்ல போகும்போது அவரை எல்லாரும் நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட ஊர்ல உள்ள எல்லாருமே அவரை நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னுதான் சொல்லுவாங்க. அவருக்கும் அவர் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்ன்னு தெரியாது, ஆடியன்ஸுக்கும் அவர் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்ன்னு தெரியாது....ப்ளீஸ் சொல்லுங்க பாஸ் அவர் எதுக்குதான் சரிப்பட்டு வரமாட்டார்?

கோலிவுட் இல்லுமினாட்டி

*இதே மாதிரிதான் வடிவேல் ஒருநாள் ஹாயா குளத்துல கால் நனைக்கப் போகும் போது உள்ள இருந்து ஒருத்தர் வெளிய வந்து போலீஸ் கேட்டா எதுவும் சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போவார். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அவரே வந்து அடிச்சு கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு போவார். பட் கடைசி வரைக்கும் அவர் எதை சொல்ல சொன்னார்னே யாருக்கும் தெரியாது. அந்தப் போலீசுக்கும் கூட அந்த ரகசியம் தெரியவே தெரியாது. எதை ப்ரோ சொல்ல வேணாம்னு சொன்னீங்க? சொல்லிட்டு போங்க.

கோலிவுட் இல்லுமினாட்டி

*வடிவேலு - பார்த்திபன் காம்போல வந்த காமெடிலாம் எப்பவுமே வேற லெவல்லதான் இருந்திருக்கு. அதுல முக்கியமான காமெடி வடிவேல் எடுத்து ஓட்டிக்கிட்டு இருந்த வாடகை சைக்கிளுக்கு பார்த்திபன் காத்து அடிச்சு கொடுக்குற காமெடி. அந்த காமெடில காத்து அடிச்சிக் கொடுத்துட்டு கடைசில பிரச்னை வந்ததால காத்தை திருப்பி கேப்பார். பட் வடிவேல் காத்துக்கு எங்க பாஸ் போறதுன்னு தெரியாம கன்ஃபியூசன்ல சுத்துவார். நீங்களே சொல்லுங்க காத்து... காத்துக்கு எங்க போறது? சோ ப்ளீஸ் சேவ் காத்து. (உண்மை தமிழனென்றால் ஷேர் செய்யவும்)

கோலிவுட் இல்லுமினாட்டி

* கரகாட்டக்காரன் படத்துல வர்ற வாழைப்பழக் காமெடி எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். அந்தப் படத்துல கடைசி வரைக்கும் கவுண்டமணிக்கு செந்தில்கிட்ட வாங்கிட்டு வர சொன்ன அந்த இன்னொரு வாழைப்பழம் என்ன ஆச்சுன்னே தெரியாது. அந்த இன்னொரு வாழைப்பழத்தை செந்தில்தான் சாப்பிட்டார்ன்னு ஆடியன்ஸுக்கு தெரிஞ்சாலும் கவுண்டமணிக்கு தெரியாதே....ஆகவே இல்லுமினாட்டிகள் மறைத்து வந்த இந்த உண்மையை இதை படித்துக் கொண்டிருக்கும் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடம் போட்டு தாறுமாறாக உடைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

கோலிவுட் இல்லுமினாட்டி

*அதே மாதிரி விஜயோட மாஸ் ஹிட்டான கில்லி படத்துல மதுரைல செமி பைனல் விளையாட போயிட்டு கடைசில திரிஷாவை கூட்டிக்கிட்டு செமி பைனல் மேட்சே விளையாடாம வீட்டுக்கு வந்துடுவார் விஜய். ஆனாலும் விஜய் நேரா பஞ்சாபிகளோட ஃபைனல் மேட்ச் விளையாட போயிடுவார். அதெப்படி அவர் செமி ஃபைனல் மேட்சே விளையாடாம ஃபைனலுக்கு விளையாட போனார்ன்னு நமக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது, அந்த பஞ்சாபி டீமுக்கும் தெரியாது. ஏன் டைரக்டர் தரணிக்கே தெரியாது. இதே சந்தேகம் தெலுங்கு கில்லி ரசிகர்களுக்கும் இருக்கு. சொல்லுங்க பாஸ் அவர் எப்படித்தான் ஃபைனலுக்கு போனார்?

கோலிவுட்

*அதே மாதிரி, அதே டீம் சேர்ந்து உருவாக்குன காவியப்படமான குருவிலயும் நிறைய மர்மமான விஷயம் இருக்கு. அந்தப் படமே ஒரு மர்மமான படம்னு எல்லாரும் தெரியும். ஆனாலும் அதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. படத்தோட நடுவுல ஒரு சீன்ல விஜய் லிப்ட் உடைஞ்சு கீழ போனதும் அந்த ஏரியாவே டென்சன்ஸ் ஆஃப் டெண்டுல்கர் ஆயிடும். ஆனா கொஞ்ச நேரத்துல விஜய் அசால்ட்டா பக்கத்துல இருக்குற ஆத்துல இருந்து ஆர்ம்ஸ் முறுக்கிக்கிட்டே எந்திரிச்சு வருவார். லிப்டுக்குள்ள போனவர் எப்படி தண்ணிக்குள்ள இருந்து எந்திரிச்சு வந்தார்ன்னு யாருக்குமே தெரியாது. சொல்லுங்க சார் அவர் எப்படி அங்கே போனார்?

கோலிவுட்

*வடிவேல் நடிச்சு ரொம்ப ஹிட் ஆன முக்கியமான படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படம் என்னதான் மாஸ் ஹிட் ஆனாலும் அதுல் தீர்க்கப்படாம போன முக்கியமான ஒரு மிஸ்டரி இருக்கு. அதுல ஒரு சீன்ல தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்னு விடுகதை சொல்லுவார் வடிவேலு. தட்டானுக்கு எப்படி மன்னா சட்டை போட முடியும்னு அங்க இருக்குற எல்லாரும் ஒரே குழப்பத்துல மூழ்கி இருப்பாங்க. அதுக்கு அப்பறம் வடிவேலு பல மன்னர் கால கதைல நடிச்சிட்டாலும் இன்னும் இந்த விடுகதைக்கு என்ன விடைன்னு தெரியவே இல்லை. ஆகவே அதை மட்டும் மாமன்னர் 23ம் புலிகேசி தீர்த்து வைக்குமாறு பாசத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.

கோலிவுட் இல்லுமினாட்டி


- லோ.சியாம் சுந்தர்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close